முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி அவர்கள் இன்று காலமானார்.
இந்தியாவின் 13 வது குடியரசுத் தலைவராக இருந்தவர் நமது பிரணாப் முகர்ஜி அவர்கள் அவருக்கு தற்போது வயது 84.
அவருக்கு மூளையில் சிறு கட்டி இருந்ததாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர.
எனவே இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி உடல்நிலை குறைபாடு காரணமாக நியூ டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அந்த மூளையில் உள்ள சிறு கட்டிய அகற்றினார்கள்.
ஆனால் ஆபரேஷனுக்கு பிறகு பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
அப்போது நடந்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உடல்நிலை கடும் பின்னடைவு அடைந்தது.
சில தினங்களில் பிரணாப் முகர்ஜி அவர்கள் கோமா நிலைக்கு சென்றார்.
அவருக்கு இயற்கை சுவாசம் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
இந்தத் தகவலை அவருடைய மகன் அபிஜிட் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்.
பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானதை அறிந்து இந்தியா துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
அவர் நமது தேசத்தின் வளர்ச்சி பாதையில் ஒரு அழியாத அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு அறிஞர் சமமானவர் ஒரு உயர்ந்த சிறந்த அரசியல்வாதி அவர் அரசியல் ஆளுமை மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் போற்றப்பட்டவர் பிரணாப் முகர்ஜி என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு தனிப்பட்ட முறையில் பிரணாப் முகர்ஜியை சந்தித்து அவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்று புகைப்படத்தையும் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள செய்தியில்
மிகவும் துயரத்துடன் துரதிருஷ்டவசமாக பிரணாப் முகர்ஜி காலமான தகவல் தேசத்திற்கு வந்துள்ளது.
அவர் மறைவுக்கு நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் எனது மரியாதையை செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்
India grieves the passing away of Bharat Ratna Shri Pranab Mukherjee. He has left an indelible mark on the development trajectory of our nation. A scholar par excellence, a towering statesman, he was admired across the political spectrum and by all sections of society. pic.twitter.com/gz6rwQbxi6
— Narendra Modi (@narendramodi) August 31, 2020
With great sadness, the nation receives the news of the unfortunate demise of our former President Shri Pranab Mukherjee.
I join the country in paying homage to him.
My deepest condolences to the bereaved family and friends. pic.twitter.com/zyouvsmb3V
— Rahul Gandhi (@RahulGandhi) August 31, 2020
https://twitter.com/ABHIJIT_LS/status/1300407074560471041?s=19











