ஆற்றல் திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.75 / 5.
நடிகர் நடிகைகள் :- விதார்த், ஷிரிதா ராவ், வம்சி கிருஷ்ணா, வித்யூ ராமன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கே.எல் கண்ணன்.
ஒளிப்பதிவு :- கொளஞ்சி குமார்.
படத்தொகுப்பு :- விஜய் வேலுகுட்டி.
இசை :- அஷ்வின் ஹேமந்த்.
தயாரிப்பு :- செவ்வந்தி மூவீஸ்.
ரேட்டிங் :- 2.75 / 5.
ஒரு நல்ல கதையை யோசித்து எழுதுவதை விட அந்த கதையை மிக சிறப்பாக நல்ல திரைக்கதை யோசித்து திரைப்பட ரசிகர்களுக்கு சுவாரசியமாகக் கொடுப்பதுதான் மிக முக்கியம்.
இந்த ஆற்றல் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் இயக்குனர் கே.எல் கண்ணன், ஒரு சென்டிமென்ட், பேன்டஸி, காதல், த்ரில்லர் என கலந்த மிக நல்ல கதையை யோசித்திருக்கிறார்.
ஆனால், மிக நல்ல கதையை யோசித்த இயக்குனர் கே.எல் கண்ணன் அதை இன்னும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கொடுத்திருந்தால் திரைப்பட ரசிகர்கள் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.
அறிவியல் தொழில்நுட்பத் துணையுடன் கொலை கொள்ளை என இஷ்டத்துக்குச் செய்து திரியும் ஒரு கூட்டத்தை சாமானிய இளைஞனொருவன் ஆற்றலுடன் எதிர் கொள்வதுதான் ஆற்றல் திரைப்படம்.
சாதாரண கார் மெக்கானிக்கான இருக்கும் சார்லியின் ஒரே மகன் கதாநாயகன் விதார்த்.
மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன கதாநாயகன் விதார்த்துக்கு ஆளில்லாமல் ஓடும் காரைக் கண்டுபிடித்து அதை ஓட வைப்பதுதான் கதாநாயகன் விதார்த்தின லட்சியமாக வாழ்ந்து வருகிறார்.
மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன கதாநாயகன் விதார்த் ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வர அவருக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் கதாநாயகன் வித்தார்த்தின் தந்தை சார்லி 10 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து எடுத்து வரும்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கொன்று பணத்தை திருடி விடுகின்றனர்.
பிறகு கதாநாயகன் வித்தார்த்துக்கு தந்தையின் மரணம் குறித்து உண்மை எப்படி தெரிய வருகிறது?
தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா இல்லையா? கடைசியில் அவரது ஆட்டோமேட்டிக் கார் உருவாக்கும் கனவு நனவானதா? இல்லையா?என்பதுதான் இந்த ஆற்றல்
திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அற்றல் திரைப்படத்தில் விதார்த் கதாநாயகன் நடித்துள்ளார்.
வழக்கம்போல கதாநாயகன் விதார்த் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்.
ஆற்றல் திரைப்படத்தில் விதார்த்கான கணம் இல்லாத இந்த கதாபாத்திரம் அவருடைய நடிப்பிற்கு தீனி போடவில்லை.
இந்த ஆற்றல் திரைப்படத்தில் கதாநாயகியாக ஷிரிதா ராவ் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்துள்ள ஷிரிதா ராவ் மிகவும் அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.
சார்லி தந்தையாக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்.
விக்னேஷ், வம்சி கிருஷ்ணா என திரைப்படத்தில் நடித்துள்ளவர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.
இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசையும் மற்றும் பின்னணி இசையும் மிகவும் அருமையாக அமைத்திருக்கின்றார்.
கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு திரைப்படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.
மிகப்பெரிய மாநகரத்தில் இத்தனை வழிப்பறி, கொள்ளை நடக்கிறது.
இதன் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுத்தது போலவே தெரியவில்லை.
திரைப்படத்தில் காவல்துறையினர் காட்சிகள் வருகிறார்கள்.
ஆனால், அவர்கள் கதாநாயகன் விதார்த்துடன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டுமே காட்டப்படுகிறார்.
எத்தனை கொலை, கொள்ளை குற்றங்களைப் பற்றி காவல்துறையினருக்கு எதுவுமே தெரியாது என்றே காட்டுகிறார்கள்.
இப்படி சில பல முக்கிய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் கே எல் கண்ணன்.
மொத்தத்தில் ஆற்றல் திரைப்படம் சுமார் ரகம்.











