பிரபல ஹாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் மரணம்!
கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்குதல் உலக நாடுகளை ஒரு இக்கட்டான நிலைக்கு கொண்டு போய் தள்ளிவிட்டது.
இந்த பாதிப்பால் லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் சிலர் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
ஐந்து முறை ஆஸ்கருக்கு நியமனம் ஆனவர் ஆலென் டேவி. இவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவருக்கு வயது 77. பிரபல ஒளிப்பதிவாளரான ஆலென் ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டிவென் ஸ்பீல் பெர்க் போன்ற பிரபல இயக்குனர் படங்களில் பணியாற்றி உள்ளார். E T எனப்படும் எக்ஸ்ட்ரா டெரெஷ்ட்ரியல், எம்பயர் ஆஃப் தி சன் போன்ற பல படங்களுக்கு ஆலென் பணியாற்றியதைக் குறிப்பிடலாம். ஆலென் மறைவுக்கு ஸ்டிவென் ஸ்பெல் பெர்க் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அத்திரையுலகில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ஆலன் டேவியா.
பிரபல இயக்குனரான ஸ்டீவன் ஸ்பில்ஸ் பெர்க் உடன் பணியாற்றியுள்ளார். E.T, The Color Purple, Empire of the Sun என்ற படங்களில் ஆலன் டேவியா பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆலன் டேவியா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Avalon, Bugsy ஆகிய படங்களுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரின் மரணம் ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.











