நெடுத்தொடரில் மோசமான காட்சிகள் – சன் தொலைக்காட்சிக்கு அபராதம்
‘மெட்டி ஒலி’ தொடர் மூலம் பிரபலமான திருமுருகன், தற்போது ‘கல்யாண வீடு’ என்ற தொடரை இயக்கி நடித்து வருகிறார்.
இந்த தொடருக்கு பெண்கள் மத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொடரில் கடந்த மே மாதம் 14 மற்றும் 15 ம் தேதிகளில் பெண்களைத் துன்புறுத்தும் விதத்திலும், அதனை தண்டிக்கும் வன்முறை காட்சிகளும் இடம்பெற்று இருந்ததாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார் மையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சன் தொலைக்காட்சிக்கு பி.சி.சி.சி ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வருகின்ற 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை ‘கல்யாண வீடு’ தொடர் துவங்கும் முன் 30 வினாடிகளுக்கு வருத்தம் தெரிவிக்கும் செய்தியை ஒளிபரப்பவும் உத்தரவிட்டுள்ளது.











