மீண்டும் நடிகர் நடிகை தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்த திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி.
இன்று மார்ச் 8 செய்தியாளர்களை சந்தித்தார் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணி.
இப்போது அவர் பேசியதாவது…
கொரோனா வைரஸ் நோய் தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.
அமெரிக்கா இத்தாலி ஈரான் போன்ற வளர்ந்த நாடுகளில் அந்தக் கொடூரமான நோய்யை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தியாவில் போதுமான அளவிற்கு வென்டிலேட்டர் வசதி இல்லை இந்த நோய் வந்துவிட்டால் அதனை தடுக்க முடியாமல் போய்விடும்.
கொரோனா வைரஸ் நோய் காரணத்தால் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பெப்ஸி சார்பாக திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவ நிதி உதவி கேட்டு இருந்தோம்.
இதுவரை தற்போது 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி வெற்றி கிடைத்துள்ளது.
இவை இல்லாமல் 2400 அரிசி மூட்டைகள் நன்கொடையாக கிடைத்துள்ளன.
திரைப்படத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த உதவி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திரைப்படக் கலைஞர்கள் இந்த நேரத்தில் அரசுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.
பெப்சி சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சத்து 25 ஆயிரம் நிதி உதவி அளிக்க உள்ளோம்.
இவ்வாறு திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்தார்.