800 திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3./5.
நடிகர் & நடிகைகள் :- மதுர் மிட்டல், மகிமா நம்பியார், நரேன், கிங் ரத்னம், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, திலீபன் வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜாபி, சரத் லோஹிதாஷ்வா, ஜானகி சுரேஷ், ரித்விக், பிருத்வி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எம்.எஸ். ஸ்ரீபதி.
ஒளிப்பதிவு :- ஆர்.டி.ராஜசேகர் ஐ.எஸ்.சி.
படத்தொகுப்பு :- பிரவீன் கே.எல்.
இசையமைப்பாளர் :- ஜிப்ரான்.
தயாரிப்பு நிறுவனம்:- மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- விவேக் ரங்காச்சார.
ரேட்டிங் :- 3./ 5.
வெள்ளைக்காரர்களுக்கு தேயிலை பறிப்பதற்காக தமிழர்கள் சிலர் குடும்பத்துடன் தேயிலை தோட்ட வேலைக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்கிறார்கள்.
தேயிலை தோட்ட வேலைக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்றவர்களில் கதாநாயகன் மதுர் மிட்டல் குடும்பமும் ஒன்று பல வருடங்களாக அங்கேயே தங்கி விடுகிறார்கள்.
இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்களுக்கு இலங்கையில் உள்ள சிங்களர்களால
பிரச்சனைகள் ஏற்படுகிறது.
கதாநாயகன் மதுர் மிட்டல்
சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் மீது அதிக ஆர்வம் உடையவராக இருக்கிறார்
கிரிக்கெட் விளையாட்டில்
வந்து வீச்சில் அதிக திறமை படைத்தவராக கதாநாயகன் மதுர் மிட்டல் இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சினால் மற்ற நாட்டு அணிகளை தோல்வி கொண்டிருந்த நேரத்தில் நமக்கு சரியான பந்து விச்சிக்கு ஒரு திறமையான ஆள் இல்லையா என்று இலங்கை அணி கவலை கொண்டிருந்த நேரத்தில் கதாநாயகன் மதுர் மிட்டல் இலங்கை அணியில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள பிரச்சனை மற்றும் உள்ள அரசியல் ஆகியவற்றை எப்படி கடந்து 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையாளராக எப்படி
கதாநாயகன் மதுர் மிட்டல்
மாறினார் என்பதுதான் இந்த 800 திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த 800 திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாநாயகனாக மதுர் மிட்டல் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் மதுர் மிட்டல்
முத்தையா முரளிதரன் எப்படி இருப்பாரோ அப்படியான தோற்றமும் அவருடைய உடல்வாகு மொழி, கையை சுழற்றுவது என பல முயற்சியை மிகவும் கஷ்டப்பட்டு மிக அதிக அளவில் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை கதாநாயகன் மதுர் மிட்டலை தவிர வேறு யாராலும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தை இவ்வளவு அழகாக கொடுத்திருக்க முடியாது.
முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க வைத்திருந்தால் திரைப்படம் எவ்வளவு அழகாக இருந்திருக்காது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதாபாத்திரத்தில் நரேன் அச்சு அசலாக அருமையாக நடித்து அசத்தியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதாபாத்திரத்தில் அடித்திருக்கும் நரேன் பேசும் வசனங்கள் திரையரங்கில் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது.
தலைவர் பிரபாகரனின் நண்பராக கருணா கதாபாத்திரத்தில் வினோத் சாகர்
அதே தோற்றத்தில் அருமையாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் மதுர் மிட்டல் தந்தையாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு
திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் பலம்.
பந்து சுழலுவதை அவ்வளவு துல்லியமாக திரைக்கு காண்பித்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான்
இசை திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
திரைப்படத்தின் வசனங்கள் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
இந்த 800 திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே தமிழ் நடிகர்கள் என்பதால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களால் திரைப்படத்திற்குள் எளிதில் பயணிக்க முடிகிறது.
பலருக்கும் தெரியாத முத்தையா முரளிதரன் கடந்து வந்த பாதையை அழகாக சொல்லி இருக்கும் இயக்குனர் ஸ்ரீபதிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை முடிந்த வரை திரைப்படமாக்கி இருக்கிறார்
மொத்தத்தில் 800 திரைப்படம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அப்படியே கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள்.











