அஸ்வின்ஸ திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25./ 5.
நடிகர் & நடிகைகள் :- வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன், முரளிதரன் எஸ், உதயதீப், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தருண் தேஜா.
ஒளிப்பதிவு :- ஏ.எம் எட்வின் சகே.
படத்தொகுப்பு :- வெங்கட் ராஜன்.ஒ
இசை :- விஜய் சித்தார்த்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா.
தயாரிப்பாளர் :- பிவிஎஸ்என் பிரசாத், பிரவீன் டேனியல்.
ரேட்டிங் :- 3.25./ 5.
லண்டனில் உள்ள மிகப்பெரிய தீவில் அழகான ஆடம்பரமான மாளிகை ஒன்று உள்ளது.
அந்த ஆடம்பரமான மாளிகையில் வாழ்ந்து வந்த ஒரு பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான விமலா ராமன் அந்த மாளிகையில் பணிபுரிந்த 15 வேலையாக்களை கொலை செய்துவிட்டு, பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான
விமலா ராமனும் தற்கொலை செய்துக் கொண்டதாகவும், கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
சடலம் எப்படி மாயமானது என்பதும் எங்கிருக்கிறது என்பது இதுவரை புரியாத புதிராக இருப்பதோடு, அந்த மாளிகையில் பல அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஒரு அமானுஷ்யம் நிறைந்த மாளிகையில் அதன் முழு விபரத்தையும் உள்ளே இருக்கும் அமானுஷ்யங்களையும் ஒரு வீடியோ படமாக எடுத்துக் கொடுக்க ஒரு மிகப்பெரிய கம்பெனி இவர்களிடம் இந்த வேலையை கொடுக்கிறது.
அந்த வேலைக்காக இந்தியாவில் இருந்து கதாநாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் லண்டன் புறப்பட்டு செல்கிறார்கள்.
அவர்கள் ஐந்து பேரும் எதிர்கொள்ளும் அமானுஷ்ய விஷயங்களும், அதன் பின்னணியையும் சுவாரஸ்யமாக மட்டும் இன்றி நொடிக்கு நொடி திகிலடைய செய்கிறது.
அதன்பிறகு அங்கு நடக்கும் அமானுஷிய விஷயங்கள் நடந்தது என்ன? அங்கு நடந்த கொலைகளுக்கான பின்னணி என்ன என்பது தான் இந்த அஸ்வின்ஸ திரைப்படத்தின் மீதி கதை.
இந்த அஸ்வின்ஸ திரைப்படத்தில் வசந்த ரவி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துவிட்டார்.
.
கதாநாயகன் வசந்த் ரவியின் ஒவ்வொரு அசைவும், பயம் கலந்த கண்களும் திரைப்படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறது.
திரைப்படத்தில் அதிகமாக வசனம் இல்லை என்றாலும், கதாநாயகன் வசந்த ரவியின் நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்.
கதாநாயகன் வசந்த் ரவி, திரைப்படத்திற்கும் மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.
கதாநாயகன் வசந்த் ரவி முதல் திரைப்படத்தில் இருந்து இந்த திரைப்படம் வரை ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அவருடைய நடிப்பை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்.
சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிகவும் தரமாக செய்திருக்கிறார்கள்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமலா ராமன், தனது கதாபாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் மிகப்பெரிய பலம் சேர்த்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே, திரைப்படம் முழுவதையும் இருட்டில் படமாக்கினாலும், மிக நேர்த்தியாக காட்சிகளை ஒளிப்பதிவின் மூலம் மிக அருமையாக கையாண்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், சச்சின் மற்றும் ஹரி ஆகியோரது ஒலிக்கலவையும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய மாய வித்தையாக அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன், திரைப்படம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே நம்மை படத்தொகுப்பினால் சீட்டில் கட்டி போடும் விதத்தில் காட்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
இதுவரை தமிழ் திரைப்பட உலகில் பலவிதமான பேய் திரைப்படங்கள் வந்திருந்தாலும் நிச்சயமாக இநத அஸ்வின்ஸ திரைப்படம் மிகவும் வித்தியாசமானது என்று அடித்து சொல்லலாம்.
திரைப்படம் பார்ப்பவர்களை அலற விட்டிருக்கிறார் இயக்குனர் தருண் தேஜா . .
புராணத்திலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து, அதிலிருந்து டெவலப் செய்து ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் தருண் தேஜா .
மொத்தத்தில், இந்த ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் இதுவரை பார்த்திராத ஒரு திகில் அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்.











