ஜவான் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 4./ 5.

நடிகர் & நடிகைகள் :- ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், பிரியா மணி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அட்லீ.

ஒளிப்பதிவு :- G.K.விஷ்ணு.

படத்தொகுப்பு :- ரூபன்.

இசையமைப்பாளர் :- அனிருத் ரவிச்சந்தர்.

தயாரிப்பு நிறுவனம்:- ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர் :- கௌரி கான் & கௌரவ் வர்மா.

ரேட்டிங் :- 4./ 5.

இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார்.

கோலிவுட் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களை பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க வைத்து அதிரடி காட்டியிருக்கும் இயக்குநர் அட்லீ, நிச்சயம் இனிமேல் பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி இயக்குநராக வலம் வருவார் என்பதை இந்த ‘ஜவான்’ உறுதிப்படுத்தி இருக்கிறது.

உலக திரைப்பட ரசிகர்களால் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஜவான் திரைப்படம் இன்று உலகம் அளவில் வெளியாகியிருக்கிறது.

திரைப்படத்தின் ஆரம்ப காட்சியில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அடிப்பட்டு ஆற்றில் மிதந்து வரும் கதாநாயகன் ஷாருக்கானை பார்டரில் உள்ள ஊர் மக்கள் மீட்டு மருத்துவ முதல் உதவிகள் செய்து காப்பாற்றுகின்றனர்.

இதனை தொடர்ந்து அங்கு வரும் மர்ம கும்பல் அங்குள்ள மக்களை கொன்று குவிக்கிறது.

காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் கதாநாயகன் ஷாருக்கான் திடீரென கண்விழித்து மர்ம கும்பலை அடித்து விரட்டி ஊர் மக்கள் அனைவரையும் காப்பாற்றி விடுகிறார்.‌

இதனால் அந்த ஊர் மக்கள் அனைவரும் கதாநாயகன் ஷாருக்கானை கடவுளாக பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

கதாநாயகன் ஷாருக்கான் மாறுவேடத்தில் சிறையில் இருக்கும் ஆறு பெண் கைதிகளை வைத்து மெட்ரோ ரயிலை கடத்துகிறார்.

அந்த குழுவின் தலைவரான கதாநாயகன் ஷாருக்கான் பயணிகளை விடுவிக்க வேண்டும் என்றால் நான் கேட்பதை செய்ய வேண்டும் என்று சிறப்பு படை அதிகாரியாக கதாநாயகி நயன்தாராவிடம் நிபந்தனை விதிக்கிறார்.

கதாநாயகன் ஷாருக்கான் விதித்த நிபந்தனை அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது.

அனைவரையும் விடுவிக்கும் ஷாருக்கான் குழு அடுத்து சுகாதாரத்துறை அமைச்சரை கடத்துகிறார்கள்.

அதன்பின் சுகாதார துறை அமைச்சரை கடத்தி இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்தையும் சீரமைக்கிறார்.

கதாநாயகன் ஷாருக்கானை பிடிக்க சிறப்பு படை அதிகாரியாக இருக்கும் கதாநாயகி நயன்தாரா முயற்சி செய்கிறார்.

இறுதியில் கதாநாயகன் ஷாருக்கான் யார்? கதாநாயகன் ஷாருக்கான் மக்களுக்கு நல்லது செய்ய காரணம் என்ன? சிறப்பு படை அதிகாரியாக இருக்கும் கதாநாயகி நயன்தாரா கதாநாயகன் ஷாருக்கானை பிடிக்க காரணம் என்ன? என்பதுதான் இந்த ஜவான் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஜவான் திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஷாருக்கான் ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல் காட்சிகள் அனைத்திலும் மாஸ் காண்பித்திருக்கிறார்.

கதாநாயகன் ஷாருக்கான் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடித்து அவருடைய ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து கொடுத்து இருக்கிறார்.

இந்த ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

சிறப்பு படை அதிகாரி கதாபாத்திரத்திற்கு நடித்திருக்கும் கதாநாயகி நயன்தாரா மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

கதாநாயகன் ஷாருக்கானுக்கு இணையாக போட்டி போட்டுக் கொண்டு நடித்து இருக்கிறார் கதாநாயகி நயன்தாரா.

ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

விஜய் சேதுபதி தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தில் வித்தியாசமான இவரது தோற்றத்தில் மிரட்டியிருக்கிறார்

ஆயுதங்கள் சப்ளை செய்யும் தொழிலதிபராக விஜய் சேதுபதி மனதில் பதிகிறார்.

சஞ்சய் தத் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தி இருக்கிறார்

இடைவெளிக்கு பின் வரும் தீபிகா படுகோனே அழகாக வந்து அருமையாக அழுத்தமான நடிப்பை பதிவு செய்து இருக்கிறார்.

பிரியாமணி, ஜாபர் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவு வாவ் சொல்ல வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, ஒவ்வொரு காட்சியையும் மிகப்பெரிய அளவில்  பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தாலும், காட்சிகளில் இருக்கும் உயிரோட்டத்தை மிக நேர்த்தியாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார்

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

படதொகுப்பாளர் ரூபனின் படத்தொகுப்பு திரைப்படத்திற்க்கு மிகப்பெரிய பலம்.

கமர்ஷியல் திரைப்படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களை கொடுத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அட்லீ.

மிகப்பெரிய அளவில் சமூக அக்கறையுடன் திரைப்படத்தை இயக்கி இருக்கும் அட்லீக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ‘ஜவான்’ திரைப்படம் திவானாக வென்றான்.

error: Content is protected !!