நடிகர் தவசிதேவர் புற்றுநோயால்) காரணமாக இன்று காலமானார்

சென்னை : 23 நவம்பர் 2020

நடிகர் சிவகார்த்திகேயன் & நடிகை ஸ்ரீதிவ்யா நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு தந்தையாக நடித்தவர் தவசி தேவர்

இந்த திரைப்படத்தில் ‘கருப்பன். குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது.

தற்போது ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது கேன்சர் (புற்றுநோயால்) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தனது மருத்துவ செலவுக்கு திரைப் பிரபலங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

நடிகர் தவசி தேவருக்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சௌந்தர ராஜா உள்ளிட்டோர் நிதியுதவி செய்தனர்.

ரஜினிகாந்த் அவரை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

மேலும் டாக்டரும், திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சரவணன் அவர்கள் மருத்துவ செலவுகள் அனைத்தையும் சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வநத நடிகர் தவசி தேவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார்

error: Content is protected !!