இயக்குநர் பாலா டுவிட்டர் பக்கத்தில் இணைந்தார் டுவிட்டரில் முதல் பதிவு தமிழக முதல்வருக்கு தான்.
சென்னை 10 மே 2021
இயக்குநர் பாலா டுவிட்டர் பக்கத்தில் இணைந்தார் டுவிட்டரில் முதல் பதிவு தமிழக முதல்வருக்கு தான்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பாலா, தற்போது டுவிட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான சேது படம் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலா.
முதல் திரைப்படத்திலேயே முத்திரை பதித்த இவர், அடுத்தடுத்து இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.
விருதுகளையும் வாரிக்குவித்தன.
குறிப்பாக நான் கடவுள் திரைப்படத்திற்காக இயக்குநர் பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இந்த நிலையில் இயக்குனர் பாலா டுவிட்டர் தளத்தில் இணைந்துள்ளார்.
அதில் தனது முதல் டுவிட்டாக, சமீபத்தில் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார் பாலா.
இயக்குனர் பாலாவின் டுவிட்டரில் முதல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தேவையற்ற வாழ்ததுரைகள் தெரிவிப்பதைத் தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டீர்கள்.
ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம். நன்றிகள்”.
“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி. (குறள்)”
என்று பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
— Director Bala (@IyakkunarBala) May 9, 2021











