தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பு மட்டுமல்லாமல் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் கூட கலந்து கொள்ள அனுமதி கிடையாது – ( பெப்சி ) தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
சென்னை 19 மே 2021
தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பு மட்டுமல்லாமல் போஸ்ட் புரொடக்சன் பணிகள் கூட கலந்து கொள்ள அனுமதி கிடையாது – ( பெப்சி ) தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுக்கும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்
( பெப்சி ) தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
.தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது.
தினந்தோறும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மே 24-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வருகிற மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்
( பெப்சி ) தலைவர் ஆர்.கே.செல்வமணி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கும் பொழுது, அங்கு பணி செய்யும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பெப்சி அமைப்பு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு மட்டுமல்லாமல் டப்பிங் பீரி புரொடக்சன் போஸ்ட் புரொடக்சன்ஸ் அனைத்து விதமான பணிகளும் அனுமதி கிடையாது.
உடல் உபாதைகளால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் அதற்கான உரிய கடிதத்தை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.











