கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளுக்கு முதல்வர் பொது நிவாரண நிதிககு திதி வழங்கிய இயக்குநர் லிங்குசாமி

சென்னை 31 மே 2021

கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளுக்கு முதல்வர் பொது நிவாரண நிதிககு திதி வழங்கிய இயக்குநர் லிங்குசாமி

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் பத்து லட்சம் வழங்கி இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து திரைப் பிரபலங்கள் பலரும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர்-தயாரிப்பாளர் லிங்குசாமி கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி இருக்கிறார்.

error: Content is protected !!