கொரோனா தடுப்பு பணிகளுக்கு தனது மகள், மகன் சார்பில் நிதியுதவி வழங்கிய நடிகர் சூரி.

சென்னை 04 ஜூன் 2021

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தனது மகள், மகன் சார்பில் நிதியுதவி வழங்கிய நடிகர் சூரி

கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூபாய் பத்து லட்சம் வழங்கி இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து திரைப் பிரபலங்கள் பலரும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகளுக்கு நடிகர்கள் இயக்குனர்கள் பலரும் நிதியுதவி வழங்கி வரும் நிலையில் நடிகர் சூரி தன்னுடைய மகன், மகள் சார்பில் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

இதையடுத்து திரைப் பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

முதன் முதலாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா, லிங்குசாமி ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் சூரி சார்பில் ரூபாய்.10 லட்சத்துக்கான காசோலையையும், மேலும் தனது மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூபாய்.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்

error: Content is protected !!