கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணியில் தமிழக சுகாதாரத் துறைக்கு உதவும் நடிகர்கள.

சென்னை 22 மே 2021

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணியில் தமிழக சுகாதாரத் துறைக்கு உதவும் நடிகர்கள.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு இரண்டாம் அலையின் அதிவேகமாக உள்ளதால் பலவிதமான நடவடிக்கையாக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

ஒரு பக்கம் ஊரடங்கு உத்தரவு மறு பக்கம் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான தடுப்பூசி என கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வரும் காரணம்தால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு வீடியோவை திரைப்பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி நாசர் ஆகியோர் வீடியோக்களில் விழிப்புணர்வு தொடர்பாக பேசி வெளியிட்டுள்ளனர்.

இதனை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இவர்கள் வீடியோவில் கூறியிருப்பதாவது…

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நம்மை அச்சுறுத்தி வருகிறது.

இதை தடுக்க நம் தமிழக அரசின் சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும்.

வெளியே சென்றால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமானது தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் நாட்டையும் காப்போம். கொரோனா நோயை வெல்வோம். மக்களை காப்பாற்றுவோம்.”

என இவர்கள் பேசியுள்ளனர்.