தொரட்டி திரைப்படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரானா தொற்றினால் காலமானார்.
சென்னை 17 ஜூன் 2021
தொரட்டி திரைப்படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரானா தொற்றினால் காலமானார்.
தொரட்டி திரைப்படத்தின் கதாநாயகன் ஷமன்மித்ரு இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்.
இன்று குரோம்பேட்டை நிலா மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
அவருக்கு தற்போது வயது 43.
சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான அவர் தமிழ், தெலுங்கு , கன்னட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாலும் தன்னை முழுமையாக அடையாளப்படுத்தி கொள்ள தொரட்டி திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றவர்.
அடுத்த திரைப்படத்திற்கான வேலைகளை துவங்கிய நேரத்தில் மரணமடைந்தது வருத்தத்திற்குரியது
அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் , மோக்ஷா என்று 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
சொந்த ஊர் காரைக்குடி, சிங்கம்புணரி.
முகவரி,
Santha’s, No 15, Sri Ram Nagar, 3rd Cross street, Peerkankaranai, New Perungalathur, Chennai – 600063.










