போலீஸார் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.ஐ கைது..!

சென்னை 23 ஜூன் 2021

போலீஸார் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.ஐ கைது..!

சேலம் மாவட்டம் எடையபட்டி சோதனை சாவடியில் மளிகை கடை நடத்தி வருபவர் வெள்ளையன் என்கிற முருகேசன்

இவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு வீடு திரும்பும் போது எடையபட்டி சோதனை சாவடியில் போலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மது அருந்தி விட்டும் மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றதும் தவறு என்று போலிசார் மோட்டார் சைக்கிளை பிடுங்கி வைத்து கொண்டனர்.

இது தொடர்பாக போலீசாருக்கும் முருகேசனுக்கும் பிரச்சனை ஏற்பட்டு போலீசார் அடித்ததில் முருகேசனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி  உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

விசாரணையின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.

மேலும், ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகிறார்.

காவல் துறையினர் தாக்கியதை அடுத்து, முருகேசன் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

error: Content is protected !!