தாயார் மறைந்த முன்று நாட்களில் மகன் நடிகர் இர்பான்கான் மறைவு.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகர் இர்பான் கான்.

நடிகர் இர்பான் கான், 1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது.

2011-ல் பான் சிங் தோமர் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் இர்பான் கானின் தாயார் சாயிதா பேகம், முதுமை காரணமாக மரணம் அடைந்தார்.

இவருக்கும் அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. .

மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை ஊரடங்கு உத்தரவு காரணமாக தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால் பெரும் மன அழுத்த பிரச்சினைக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று நடிகர் இர்பான் கானும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவருக்கு வயது 54.

2018ம் ஆண்டு முதல் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருத லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் இர்பான் கானுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருந்ததால் மும்பையில் கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த இர்பான் கான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் இறுதி நிமிடங்களில் அவரது குடும்பத்தினர் அருகில் இருந்துள்ளனர்.

அவருக்கு சுதபா என்ற மனைவியும், பபில், அயன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு முன்னதாக அவர் நடித்த ஆங்கிரேஸி மீடியம் என்ற படம் ரிலீசானது இங்கே கவனிக்கதக்கது.