பன்னிக்குட்டி திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.5 / 5.
நடிகர் நடிகைகள் :- யோகி பாபு, கருணாகரன், சிங்கம் புலி, லட்சுமிப்ரியா, டி பி கஜேந்திரன், தங்கதுரை, விஜய் டிவி ராமர், திண்டுக்கல் லியோனி, மாலினி சாத்தப்பன், ஷாதிகா, மற்றும் பலர்.
இயக்கம் :- அனுசரண்.
ஒளிப்பதிவு :- சதீஷ் முருகன்.
படத்தொகுப்பு :- அனுசரண்.
இசை :- கிருஷ்ண குமார்.
தயாரிப்பு :- லைக்கா புரொடக்ஷன்ஸ்.
ரேட்டிங் :- 2.5 / 5.
தமிழ் திரைப்பட உலகில் இதுவரை வெளிவந்த ஒரு சில திரைப் படங்களின் கதைகளைப் பார்க்கும் போது இப்படி எல்லாம் ஒரு கதை இருக்குமா என்று ஆச்சரியப்பட வைக்கும்.
ஒரு சில திரைப்படங்கள் அட, இதெல்லாம் ஒரு கதையா தேவையா என யோசிக்க வைக்கும்.
கதையே இல்லாமல் ஒரு சில திரைப்படங்கள் இருக்கும் அந்த வகையில் வெளி வந்திருக்கும் திரைப்படம் தான் பன்னி குட்டி.
இயக்குனர் அனுசரண் இயக்கிய முதல் திரைப்படம் கிருமி இரண்டாவதாக ‘சுழல்’ என்ற விறுவிறுப்பான இணையத் தொடரின் கடைசி நான்கு பகுதிகளை இயக்கிய அனுசரண் தான் இந்த ‘பன்னிக்குட்டி’ திரைப் படத்தையும் இயக்கியுள்ளார் என்பதை நம்ப முடியவில்லை.
வாழ்கையில் பல கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கும் கதாநாயகன் கருணாகரன் குடியில் மூழ்கியிருக்கும் அப்பாவுடனும், கணவருடன் சண்டையிட்டு தாய் வீட்டிலேயே தங்கியிருக்கும் தங்கையுடனும் கதாநாயகன் கருணாகரன் வாழ்ந்து வருகிறார்
இவருடைய காதல் கைக்கூடாத விரக்த்தியில் கதாநாயகன் கருணாகரன் தற்கொலைக்கு முயல்கிறார்.
அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்து தோற்றுப் போகிறவர் கதாநாயகன் கருணாகரன்.
அச்சமயம் அவரை சிலர் காப்பாற்றி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர்.
அந்த சாமியாரின் ஆலோசனைப்படி பைக் ஒன்றைத் திருடுகிறார்.
அந்த பைக்கில் போகும் போது பன்றி மீது மோதி விடுகிறார்.
மீண்டும் அந்தப் பன்றி மீது மோதினால் தான் கதாநாயகன் கருணாகரனுக்கு நல்லது நடக்கும் எனக் கூறுகிறார் சாமியார்.
பன்னிக்குட்டி மீது மோதியது
கெட்ட சகுனம் என்று சாமியார் சொற்படி பரிகாரம் பெற மீண்டும் அந்த பன்னிக்குட்டியை மீண்டும் இடிப்பதற்காக அந்தப் பன்றி எங்கிருக்கிறது என்று நண்பர்களுடன் கதாநாயகன் கருணாகரன் சேர்ந்து ஊர் முழுவதும் தேடுகிறார்கள்
இதனிடையே யோகிபாபு பன்னிக்குட்டி மீது தூசு படமால் பத்திரமாக வளர்த்து வருகிறார்.
ஊருக்குள் பன்றிக் காய்ச்சல் பரவ அதிலிருந்து அந்த பன்னிக்குட்டியை காப்பாற்ற யோகிபாபு முயற்சிக்கிறார்.
அந்த சாமியார் என்ன சொன்னார்? அந்த பன்னிக்குட்டி என்ன ஆனது? கதாநாயகன் கருணாகரன் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த பன்னிக்குட்டி திரைப்படத்தின் மீதி கதை.
இந்த பன்னிக்குட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக கருணாகரன் நடித்திருக்கிறார்.
உத்ராவதி என்ற கதாப்பாத்திரத்தில் வரும் கதாநாயகன் கருணாகரன், அவரின் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
கிராமத்து இளைஞன் கதாப்பாத்திரத்தை ம்
மிகவும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
அப்பாவியாக தோன்றும் இடங்களில் அவரின் நடிப்பு மூலம் சோகத்தை பார்வையாளர்கள் மத்தியில் பேச வைக்கிறார்..
திட்டாணியாக நடித்திருக்கும் யோகிபாபு குறைவான காட்சிகளில் வந்தாலும் அவரின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துவிடுகிறார்.
இவருக்கே உரித்தான காமெடி பாணியில் அனைவரையும் சிரிக்கவைத்துள்ளார்
கதாநாயகன் கருணாகரன் ஜோடியாக நடித்துள்ள கதாநாயகி லட்சுமிப்ரியா அருமையான நடித்திருக்கிறார்.
காமெடிதான் இல்லை, இவர்கள் காதல் காட்சியையாவது கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாம்.
ஐ.லியோனி, ராமர், தங்கதுரை, சிங்கம் புலி, டிபி கஜேந்திரன், மாலினி சாத்தப்பன், ஷாதிகா உள்ளிட்ட பலரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
கிராம பின்னணியை மையப்படுத்தியுள்ள நிரைப்படம் என்பதால் அதனை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
கிருஷ்ண குமாரின் பின்னணி இசை படத்தின் நீரோட்டத்தில் பயணிக்க வைத்திருக்கிறது.
‘பன்னிக்குட்டி பன்னிக்குட்டி’ என்ற பாடல் படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கிறது.
திரைக்கதை ஸ்வாரசியமாக இல்லாததால் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
கிராம பின்னணியில் நடக்கும் கதை என்பதால் அதனை எதார்த்தமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
இதோ, சிரிக்க வைப்பார்கள், அதோ சிரிக்க வைப்பார்கள் என கடைசி வரை காத்திருந்து ஏமாந்தது தான் மிச்சம்.
எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த திரைப்படங்கள் இந்த ஆண்டில் நிறைய திரைப்படங்கள் வந்துவிட்டது.
அந்த திரைப்பட பட்டியலில் இந்தப் படமும் இணைந்து உள்ளது.
மொத்தத்தில் பன்னிக்குட்டி திரைப்படம் பன்னிக்குட்டி இன்னும் வளரனும்.











