தளபதி 67 திரைப்படத்தின் அடுத்த கதாநாயகி கன்ஃபார்ம் செய்த இயக்குனர்.!!
சென்னை 21 ஆகஸ்ட் 2022 தளபதி 67 திரைப்படத்தின் அடுத்த கதாநாயகி கன்ஃபார்ம் செய்த இயக்குனர்.!!
உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நடிப்பில் வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் இதன் தளபதி 67 படப்பிடிப்பு ஜோராக ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த திரைப்படத்தில் இணைவதற்குள் லோகேஷ் கனகராஜ் மற்ற நட்சத்திரங்களின் தேர்வை முடித்துவிட இருக்கிறார்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பல டாப் கதாநாயகர்கள் இந்த தளபதி 67 திரைப்படத்தில் இணைய இருக்கின்றனர்.
மேலும் தளபதி விஜய்யுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை திரிஷா 14 வருடங்களுக்கு பிறகு இந்த தளபதி 67 திரைப்படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இதுவே திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அதை மேலும் அதிகரிக்கும் விதமாக தற்போது மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த தளபதி 67 திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றொரு கதாநாயகியாக தேர்வாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஏற்கனவே இவர் நடிகர் தளபதி விஜய்யுடன் இணைந்து சர்க்கார், பைரவா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அதன் பிறகும் கூட நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடிகர் தளபதி விஜய்யுடன் இணைவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டார்.
அந்த முயற்சியின் பலனாகத்தான் தற்போது அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான் இன்று கூறப்படுகிறது.
ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் இந்த இரண்டு நடிகைகளையும் இப்போது ட்விட்டர் தளத்தில் பாலோ செய்ய ஆரம்பித்துள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கிறதாம்.
இதனால் தளபதி விஜய்யின் ரசிகர்கள் தற்போது பயங்கர குஷியில் இருக்கின்றனர்.
கூடிய விரைவில் தளபதி 67 திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.











