ட்ராமா திரை விமர்சனம் ரேட்டிங் :- 1.5 / 5.

நடிகர் நடிகைகள் :- கிஷோர்குமார், சார்லி, ஜெய் பாலா, வின்சென்ட்  நகுல், வினோத்  முன்னா காவ்யா  பெல்லு, மரியா  பிரின்ஸ், ப்ரீத்தி  ஷா  பிரேம்குமார்  விஜயலட்சுமி R, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அஜூ கிழுமலா.

ஒளிப்பதிவு :- அகில்  அலியாஸ்.

படத்தொகுப்பு :- ஷினோஸ்.

இசை :- பிஜிபால்.

தயாரிப்பு :- வைப் 3 புரொடக்ஷன்ஸ் – சசிகலா புரொடக்ஷன்ஸ்.

ரேட்டிங் :- 1.5 / 5.

தமிழ் திரைப்பட உலகின் புதுமையான கதைகள் எடுத்துக்கொண்டு வரும் இயக்குனர்கள் வித்தியாசமான திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று தமிழ் திரைப்படம் உலகிற்கு வருகிறார்கள்.

அப்படி வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்டு வித்தியாசமாக திரைப்படம் எடுக்க வேண்டும் என நினைத்து ஒரு திரைப்படத்தை ரசிக்க முடியாத அளவிற்கு இயக்கியிருக்கிறார் இயக்குனர் அஜூ  கிழுமலா.

சிங்கிள் சார்ட் திரைப்படம் என இரண்டு மணி நேரம் ஒரு காவல் நிலையத்திலேயே திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.

ஒரு கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் காவல்துறை
உதவி ஆய்வாளராக புதியதாக பதவி ஏற்கிறார் கதாநாயகன் ஜெய்பாலா.

அவருடன் அதே காவல் நிலையத்தில் பல காவலர்களும் பணிபுரிகிறார்கள்.

அதே காவல் நிலையத்தில் ஏட்டாக சார்லி பணியாற்றி வருகிறார்.

கதாநாயகன் ஜெய்பாலாவின் காதலியான கதாநாயகி காவ்யா பாலுவின் பிறந்தநாள் தினத்தை சக காவலர்கள் அந்த காவல் நிலையத்தில் கதாநாயகி காவ்யா பாலுவின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் துண்டிக்க காவல் நிலையத்தில் ஏட்டாக
இருக்கும் சார்லியை யாரோ கொலை செய்துவிடுகின்றனர்.

அங்கு இருக்கும் யாரோ ஒருவரால் தான் சார்லி கொலை செய்யப்பட்டிருக்கிறார், யார் கொலைகாரன்.? என்பதை விசாரிக்க வருகிறார் கிஷோர்.

கொலைக்கான காரணம் என்ன கொலைக்கான பின்னணி என்ன என்பதை தெரிந்துக் கொள்ள காவல்துறை மேல் அதிகாரியாக கிஷோர் கொலையை விசாரணை செய்வதற்கு அந்த காவல் நிலையத்திற்கு வருகிறார்.

யார் இந்த கொலையை நிகழ்த்தியது? இந்த கொலைக்கான காரணம் என்ன? இது அனைத்தையும் கிஷோர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இநத ட்ராமா திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ட்ராமா திரைப்படத்தில் ஜெய் பாலா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

அவருடைய கதாபாத்திரத்தில்
நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இந்த டிராமா திரைப்படத்தில் கதாநாயகியாக காவ்யா  பெல்லு நடுத்திருக்கிறார்.

இவருடைய நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஏட்டு கதாபாத்திரத்தில் மிக அருமையாக சார்லி நடித்து இருக்கிறார்.

சார்லியின் நடிப்பு ஆழமானதாக தென்படுகிறது.

காவல் துறை மேல் அதிகாரியாக வரும் கிஷோர் குமார் அவருடைய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்.

வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, இவர்களின் நடிப்பு புதுமுக நடிகர்கள் என்ற எண்ணத்தை வரவைக்கிறது. இவர்கள் நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் அகில் அலியாஸ் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பிஜிபாலின் இசை ரசிக்கும்படி இல்லை.

ஒரே இடத்தில் நடக்கும் கதையை எடுத்துக் கொண்டு அதை திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தது இயக்குனரை பாராட்டக்குறியது.

இருந்தும் திரைப்படத்தின் திரைக்கதையில் சுவாரசியம் இல்லை.

திரைக்கதையில் விறுவிறுப்பை இன்னும் கொஞ்சம் கூட்டியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.

சில காட்சிகளில் ஒரே டேக்கில் எடுத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் அஜூ கிழுமலா.

மொத்ததில் ட்ராமா  திரைப்படம் சுவாரஸ்யம் இல்லை.

error: Content is protected !!