பரோல் திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.75/5
நடிகர் நடிகைகள் :- R S கார்த்திக், லிங்கா, கல்பிக்கா, மோனிஷா முரளி, விநோதினி வைத்தியநாதன், மேக் மணி, ஷிவம், டென்னிஸ், இம்மானுவேல், ஜானகி சுரேஷ்,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- துவாரக் ராஜா.
ஒளிப்பதிவு :- மகேஷ் திருநாவுக்கரசு.
படத்தொகுப்பு :- முனிஸ்.
இசை :- ராஜ்குமார் அமல்.
தயாரிப்பு :- ட்ரிப்பர் என்டர்டைன்மெண்ட்.
தயாரிப்பாளர்:- ச.மதுசூதனன்.
ரேட்டிங் :- 2.75./ 5.
தமிழ் திரைப்பட உலகில் வடசென்னனை வாழ்வியல் சார்ந்த கதைகளை பார்த்தால் சென்னையில் வசிப்பவர்கள் அனைவருக்கும் அடி வயிற்றில் பயம் தெரியும் என்றால் மற்ற மாவட்டத்துக்காரர்கள் இப்படிப்பட்ட வடசென்னையை எப்படி எல்லாம் எடுத்துக் கொள்வார்கள் என தெரியவில்லை.
இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கி இயக்குனர் துவாரக் ராஜா.வரை வடசென்னையை பலவித பரிமாணத்தில் பிரித்து தமிழ் திரைப்பட உலகில் காண்பித்திருக்கிறார்கள்.
தமிழ் திரைப்பட உலகில் ஒரு திரைப்படத்திற்கான டீசர், டிரைலர் மூலம்தான் இந்தக் காலத்தில் அந்த திரைப்படத்திற்கான அறிமுகம் திரைப்பட ரசிகர்களிடம் கிடைக்கிறது.
இந்த திரைப்பட டிரைலருக்கு நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பின்னணிக் குரல் மூலம் கூடுதல் கவனத்தைக் கொடுத்தார்.
டிரைலரில் இருந்த வன்முறைக் காட்சிகள் அதைப் பார்த்தவர்களுக்கு நிறையவே அதிர்ச்சியைக் கொடுத்தது,
காதல் கசக்குதய்யா’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம் இநத பரோல்.
கணவனை இழந்த தாய் ஜானகி சுரேஷ் சிறு வயதிலேயே இரு பிள்ளைகளை தனி ஆளாய் வளர்த்து வருகிறார்.
தனது தாய் ஜானகி சுரேஷ் முத்த மகன் லிங்கா மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்.
இதனால் பொறாமை கொள்ளும் இளைய மகன் ஆர்.எஸ்.கார்த்திக் தன் அண்ணன் மீது கோபம் கொள்கிறார்.
இதனிடையே தனது தாயை தவறான பார்வையில் பார்க்கும் ஒரு நபரை லிங்கா கல்லை கொண்டு அடித்து கொலை விடுகிறான்.
கொலை செய்ததால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் லிங்கா, சிறையில் சிலர் தவறான முறையில் நடந்து கொள்கிறார்கள்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத லிங்கா தன்னிடம் தப்பாக நடந்த மூன்று பேரையும் ஒரு கட்டத்தில் கொலை செய்துவிடுகிறான்.
தனது மகனை எப்படியாவது சிறையில் வெளியே எடுக்க வேண்டும் என தாய் போராடுகிறார்.
கொலை செய்த அண்ணன் லிங்காவை வெளியே எடுக்க முயற்சி செய்யும் தன் தாய் மீது கோபம் அடையும் ஆர் எஸ் கார்த்திக், அண்ணன லிங்கா வெளியே வராதபடி திட்டம் தீட்டுகிறான்.
இதனிடையே தனது முத்த மகனை வெளியே எடுக்க வேண்டும் என்று முயற்சிக்கும் தாய் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.
தனது தாயின் இறுதி சடங்குகளை தானே செய்து முடித்துவிடலாம் என்று திட்டம் போடும் ஆர் எஸ் கார்த்திக் லிங்காவின் கூட்டாளிகளிடம் இருந்து பிரச்சினைகள் வருகிறது.
இதனால் வேறு வழியில்லாமல் தனது அண்ணன் லிங்காவை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறான் ஆர் எஸ் கார்த்திக்.
இறுதியில் தனது அண்ணனை பரோலில் வெளியே ஆர் எஸ் கார்த்திக் எடுத்தானா? எடுக்கவில்லையா? பரோலில் எடுப்பதற்காக ஆர் எஸ் கார்த்திக் எடுக்கும் முயற்சிகள் வெற்றிப் பெற்றதா? இல்லையா ? தாயின் இறுதி ஆசை நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? என்பதுதான் இநத பரோல் திரைப் படத்தின் மீதிக்கதை.
இந்தப் பரோல் திரைப்படத்தில் லிங்கா மற்றும் ஆர் எஸ் கார்த்திக் இருவரும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்கள்.
கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்கா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பின்னணி இசையுடன் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாஸ் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
தன்னுடைய எதார்த்த நடிப்பால் பல உணர்வுகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார்.
கோவலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.எஸ்.கார்த்திக் தன்னுடைய கோபமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.
கதாநாயகிகளாக வரும் கல்பிகா மற்றும் மோனிஷா முரளி இருவரும் கொடுத்த பணியை சரியாக செய்து முடித்துள்ளனர்.
தாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜானகி சுரேஷின் நடிப்பு ரசிக்கும்படி இருந்தாலும் சில இடங்களில் மிகையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது போன்று தோன்றுகிறது.
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வரும் வினோதினி தனிகவனம் பெறுகிறார்.
நீதிமன்ற காட்சிகளில் நடக்கும் இவரின் உரையாடல்கள் கைத்தட்டல்களை பெறுகிறது.
இசையமைப்பாளர் ராஜ்குமார் அமலின் பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
வடசென்னையில் உள்ள கதையை படமாக்கிவிட்டு அந்த மக்களின் வாழ்வியலில் ஒன்றிருக்கும் பறை இசை கருவிகள் மற்றும் கானா பாடல்கள்களை பயன்படுத்தாதது வடசென்னை எதார்த்திலிருந்து விலகி இருக்கிறது.
இயக்குனர்கள் மனதில் நினைப்பதை ஒளிப்பதிவாளர் பூர்த்தி செய்ய வேண்டும்.
தன் ஒளிப்பதிவின் மூலம் பூர்த்தி செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் திருநாவுக்கரசு.
முனிஸ் படத்தொகுப்பு கதையின் ஒட்டத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
புதிய கதைக்களமும் புதுமாதிரியான திரைக்கதையை வைத்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
பரோலில் எடுப்பதற்காக முயற்சிக்கும் போராட்டம் வைத்து மையக்கருவாக வைத்து இந்த பரோல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் துவராக் ராஜா,
அதற்கு பின்னால் நடக்கும் விஷயங்களை திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்திருக்கு இயக்குனர் துவராக் ராஜாவிற்கு பாராட்டுக்கள்.
ஒரு சில இடங்களில் தேவையில்லாமல் வசனங்கள் இருக்கிறது அந்த வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் பரோல் திரைப்படம் விறுவிறுப்பு அதிகம்.











