குய்கோ திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5/5.
நடிகர் & நடிகைகள் :- விதார்த், யோகி பாபு, இளவரசு, முத்துக்குமார், பிரியங்கா, துர்கா, வினியோதினி வைத்தியந்தன், கருணா ராஜா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- டி அருள் செழியன்.
ஒளிப்பதிவாளர் :- ராஜேஷ் யாதவ்.
படத்தொகுப்பாளர் :- ராம் பாண்டியன்.
இசையமைப்பாளர் :- அந்தோணி தாசன்.
தயாரிப்பு நிறுவனம்:- ஏஎஸ்டி பிலிம்ஸ் எல்எல்பி.
தயாரிப்பாளர் :- ஏஎஸ்டி பிலிம்ஸ் எல்எல்பி.
ரேட்டிங் :- 3.5/ 5.
வேலூர் மாவட்டத்தில் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த யோகி பாபு அரபு நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்த்து வருகிறார்.
யோகிபாபுவின் தாய் உடல் நலத் குறைவால் இறந்துவிட, யோகி பாபு துபாயில் இருந்து வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும் என்பதால் ஃப்ரீசர் பாக்ஸை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
ஐபிஎல் மேட்ச் பார்ப்பதற்காக சென்னைக்கு செல்ல வேண்டிய கதாநாயகன் விதார்த், ஃப்ரீசர் பாக்ஸுடன் அந்த கிராமத்திற்கு செல்கிறார்.
அரபு நாட்டில் இருந்து அந்த கிராமத்துக்கு வரும் யோகி பாபு, தனது தாய் உயிருடன் இருக்கும் போது தாயை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தத்தில், தன் தாயின் இறுதி சடங்கை திருவிழா போல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
தன் தாயின் உடல் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸை லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி, அதை கடவுள் ஆக வணங்கவும் செய்கிறார்.
அந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் முத்துக்குமாருடன் கதாநாயகன் விதார்த் வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்காக சொல்கிறார்கள்.
இதற்கிடையே, இதனிடையே வட்டிக்கு பணம் வாங்கிய இவர்களைப் கண்டு பயந்து மரத்திலிருந்து விழுந்து காலை உடைத்துக் கொள்ள காவல் துறை வழக்கு பதிவு செய்கிறது.
அந்த வழக்கில் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் விதார்த், சில நாட்கள் யோகி பாபுவின் ஊரில் தங்க வேண்டிய சுழல் ஏற்படுகிறது.
அதன்படி கதாநாயகன் விதார்த் அந்த ஊரில் தங்க, திடீரென்று யோகி பாபு தனது தாயின் கடவுளாக கும்பிடும் ஃப்ரீசர் பாக்ஸ் திடீரென காணாமல் போய் விடுகிறது.
யார் அந்த ஃப்ரீசர் பாக்ஸை திருடினார்கள் திருடு போன ஃப்ரீசர் பாக்ஸ் கிடைத்ததா? கிடைக்கவில்லையா?
கதாநாயகன் விதார்த்தின் சிக்கல் இருந்து வெளியில் வந்தாரா? அந்த சிக்கலில் இருந்து வெளி வரவில்லையா? என்பதுதான் ‘குய்கோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தக் குய்கொ திரைப்படத்தில் கதாநாயகனாக விதார்த் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விதார்த், எப்போதும் போல் தனது கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாகவும் எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார்.
யோகி பாபு, தனது ஒவ்வொரு காட்சிகளிலும் அசால்டாக நடிப்பை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருப்பதோடு, மட்டும் அல்லாமல் டைமிங் காமெடி மூலம் திரையரங்கை அதிர வைத்துவிட்டார்.
இளவரசுவின் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம், அவருடைய கதாபாத்திரமும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
இந்தக் குய்கோ திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடித்திருக்கிறார்.
இந்தக் குய்கோ திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக துர்கா நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விதார்த்துக்கு ஜோடியாக ஸ்ரீபிரியங்கா, யோகி பாபுக்கு ஜோடியாக துர்கா என இரண்டு கதாநாயகிகளும் தங்களுக்கான வேலையை சரியாக செய்து, திரைப்படம் சுவாரஸ்யமாக நகர அருமையாக நடித்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளராக வரும் கருணா ராஜா அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுடைய உணர்வுக்கு ஏற்ப காட்சிகளை ஒளிப்பதிவு மூலம் திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆண்டனி தாசனின் இசையில் பாடல்கள் இனிமையாக இருப்பதோடு, வித்தியாசமான முயற்சியாகவும் இருக்கிறது.
மிகப்பெரிய ஹிட்டான இந்தி பாடல் மெட்டை காதல் பாடலாக போட்டவர், திருமண பாடலை பாகவதர் குரலில் ஒலிக்க வைத்து மிகவும் அழகாக ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.
சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை நக்கல் நையாண்டியோடு காட்சிகளாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் அருள்செழியன், வசனங்களிலும் அதே ஃபார்மூலாவை பயன்படுத்தி திரைப்படம் மூலம் சிரிக்கவும், வைத்திருக்கிறார் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
மாலையில் வரும் பேப்பர் மறுநாள் காலையும், காலையில் வரும் பேப்பர் அன்று மாலையும் கிடைக்க கூடிய ஒரு கிராம். தற்போதைய நவீன காலக்கட்டத்திலும் இப்படி ஒரு கிராமம் இருக்கிறது என்றால் அந்த மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், என்பதை சோகமாக சொல்லாமல் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குநர் அருள்செழியனுக்கு திரைப்படம் முழுவதுமே இதுபோன்ற சமூக சிக்கல்களை சிரிக்கும் படியும் சிந்திக்கப் படியும் சொல்லி பல காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.
மொத்தத்தில் குய்கோ திரைப்படம் பார்ப்பவர்கள் கொண்டாடமல் இருக்க மாட்டார்கள்.











