எல.ஜி.எம் திரைவிமர்சனம் ரேட்டிங்:-3.5/5.
நடிகர் & நடிகைகள் :- ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு, RJ விஜய், வெங்கட் பிரபு, VTV கணேஷ்,ஸ்ரீநாத், வினோதினி வைத்தியநாதன், தீபா சங்கர், விக்கல்ஸ் விக்ரம், ஹரி முனியப்பன், சாண்டி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ரமேஷ் தமிழ்மணி.
ஒளிப்பதிவு :- விஸ்வஜித் ஒடுக்கத்தில்.
படத்தொகுப்பு :- பிரதீப் E ராகவ்.
இசை :- ரமேஷ் தமிழ்மணி.
தயாரிப்பு நிறுவனம் :- தோனி என்டர்டெயின்மென்ட்.
தயாரிப்பாளர் :- சாக்ஷி சிங் தோனி, விகாஸ் ஹசிஜா, ஷர்மிளா J ராஜா,M.V.M. வேல்மோகன்
ரேட்டிங் :- 3.5/ 5.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் தனக்கு தந்தை இல்லாமல் தன் தாய் நதியாவுடன் வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாணும், கதாநாயகி இவானாவும் இரண்டு வருடமாக தீவிரமாக காதலித்து வருகிறார்கள்.
இரண்டு வருட காதலுக்கு பின் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுக்கிறார்கள்.
இவர்களுடைய திருமணத்திற்கு இருவருடைய பெற்றோர்களும் எந்தவித பிரச்சனையும் இன்றி திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதிக்கிறார்கள்.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் தனது தாய் நதியாவுடன் திருமண சம்பந்தம் பேசபோன இடத்தில், ஒரு பிரச்சினை வெடிக்கிறது.
அதாவது, கல்யாணத்திற்கு பிறகு முன்பின் தெரியாத உனது தாயிடம் இருப்பது மிக கடினமான விஷயம் என கதாநாயகி இவானா கதாநாயகன் ஹரிஷ் கல்யாண்யிடம் தெரிவிக்க திருமண பேச்சு நின்று போகிறது.
தனக்கு தந்தை இல்லாத கதாநாயகன் ஹரிஷ் கல்யாண், தனது தாய் நதியாவை தனியாக விடுவதை நினைத்து பார்க்க கூட முடியாது, என கதாநாயகி இவானாவிட்ம் கூறினார்.
இந்த பிரச்சனைக்கு தீர்வாக கதாநாயகி இவானா ஒரு யோசனை கூறுகிறார்.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாணை பிரிய மனசில்லாமல் மாமியார் நதியாவை பற்றி புரிந்து கொள்வதற்கு ஒரு ட்ரிப் போலாம் என கதாநாயகி இவானா கூறுகிறார்.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாணும் தனது தாய் நதியாவை ஏமாற்றி அழைத்து செல்கிறார்.
இரண்டு குடும்பத்தாரும் ட்ரிப் போக, அந்த ட்ரிப்பால் கதாநாயகி இவானாவும், கதாநாயகன் ஹரிஷ் கல்யாணின் தாய் நதியாவும் பழகி புரிந்து கொண்டார்களா? புரிந்து கொள்ளவில்லையா? கதாநாயகி இவானாவும், கதாநாயகன் ஹரிஷ் கல்யாணுக்கும் திருமணம் நடைபெற்றதா? நடைபெறவில்லையா?
என்பதுதான் இந்த எல்.ஜி.எம் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த எல்.ஜி.எம்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
முதல் பாதியில் காதலியா தாயா என்று வரும் காட்சியில் தன் தாய் தான் முக்கியம் என கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் யதார்த்தமாக நடித்திருக்கிறார்
இந்த எல்.ஜி.எம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருக்கிறார்.
கதாநாயகி இவானா துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
அவருடைய முகபாவனைகளில் அதிகமாக ஸ்கோர் செய்து இருக்கிறார்.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் தாயாக வரும் நதியா முதல் பாதியில் வயதான தாயாகவும், இரண்டாம் பாதியில் இளம் வயது தாயாகவும் அருமையாக அனுபவ படிப்பை கொடுத்திருக்கிறார்.
பெற்ற தாயின் உணர்வை அழுத்தமாக நடிப்பின் மூலம் பதிவு செய்து இருக்கிறார்.
குறிப்பாக நதியா நடனத்திலும் அசத்தி இருக்கிறார்.
யோகிபாபுவின் காமெடி காட்சிகள் நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.
யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது.
மிர்ச்சி விஜய் நடிப்பு ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்.
மிர்ச்சி விஜய் தனது பங்கிற்கு டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விஸ்வாஜித்தின் ஒளிப்பதிவு காட்சிகளை மட்டும் இன்றி கதாபத்திரங்களையும் அழகாக காட்டியியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ் மணியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருப்பதோடு, முணுமுணுக்கவும் வைக்கிறது. பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது.
உலகம் முழுவதும் குடும்பங்களில் உள்ள ஒரு பிரச்சனையை அழகான காதல் கதையாகவும், சுவாரஸ்யமான குடும்ப திரைப்படமாகவும் கொடுத்து இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில் எல்.ஜி.எம். திரைப்படம் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.











