லக்கிமேன் திரைவிமர்சனம் ரேட்டிங்:-3.5/5.
நடிகர் & நடிகைகள் :- யோகி பாபு, வீரா, ரைச்சல் ரபேக்கா,அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயக்குமார், கௌதம் சுந்தரராஜன், ஹலோ கந்தசாமி, ராகுல் தாத்தா, பிரதீப் கே விஜயன், அமித் பார்கவ், சாத்விக், சுஹாசினி குமரன், விலங்கு ரவி, டேவிட் சாலமன், அஜித் கோஷி, டெம்பிள் மங்கி தாவூத், மிப்பு சாமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பாலாஜி வேணுகோபால்.
ஒளிப்பதிவு :- சந்தீப் கே. விஜய்.
படத்தொகுப்பு :- ஜி. மதன்.
இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.
தயாரிப்பு நிறுவனம் :- திங்க் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- திங்க் ஸ்டுடியோஸ்.
ரேட்டிங் :- 3.5/ 5.
கதையின் நாயகன் யோகி பாபு, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இடைத்தரகராக வேலை செய்து வருகிறார்.
மனைவி ரேச்சல் ரபேகா, எட்டு வயதில் ஒரு மகன் இவர்களுடன் குடும்ப கஷ்டத்துடன் கதையின் நாயகன் யோகி பாபு, வாழ்ந்து வருகிறார்.
தனது மனைவி மகனுடன் ஏழ்மையான நிலையில் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் கதையின் நாயகன் யோகி பாபு, தனது இப்படிப்பட்ட நிலைக்கு தனக்கு அதிர்ஷ்டம் இல்லாததுதான் காரணம் என்று நினைக்கிறார்.
தன்து சிறுவயதில் முதல் தன்ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று நினைத்து வாழும் வரும் நிலையில் சிட்பண்ட் கம்பெனியில் குலுக்கல் நடைபெற்று குலுக்கலில் விலை உயர்ந்த கார் ஒன்று பரிசாக கதையின் நாயகன் யோகி பாபுக்கு கிடைக்கிறது.
தனக்கு குலுக்கலில் விழுந்த அந்த காரை தனது முதல் அதிர்ஷ்டம் என்று கொண்டாடி வரும் கதையும் நாயகன் யோகி பாபு, தனக்கு இந்த கார் கிடைத்த நேரம் தனது ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் அடைந்து பொருளாதார ரீதியாகவும் சற்று உயர்வடைகிறார்.
இதற்கிடையே, கதையின் நாயகன் யோகி பாபுவிற்க்கு கிடைத்த அதிர்ஷ்டமான கார் திடீரென்று காணாமல் போய்விடுகிறது.
அதன்பின் கதையின் நாயகன் யோகி பாபுவின் வாழ்க்கை நிலைமை என்னவானது? குலுக்கலில் விழுந்த காணாமல் போன தனது அதிர்ஷ்டமான கார் கதையின் நாயகன் யோகி பாபுக்கு கார் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த லக்கிமேன் நிரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த லக்கி மேன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார்.
காமெடி கதாபாத்திரங்கள் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டுமன்றி கதையின் நாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கதையின் நாயகன் யோகி பாபு, மிக இயல்பாக நடித்ததின் மூலம் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வலு சேர்த்திருக்கிறார்.
கதையின் நாயகன் யோகி பாபு எமோஷனால காட்சிகளில் அவரது நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது.
கதாநாயகன் யோகி பாபுவிற்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரேச்சல் ரபேகா, மிகவும் இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் இவருடைய நடிப்பு பாராட்டுக்குரியதாக உள்ளது.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீராவின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.
கதையின் நாயகன் யோகிபாபுவின் நண்பராக நடித்திருக்கும் அப்துல் லீ வரும் அனைத்து காட்சிகளிலும்
மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சந்தீப் கே.விஜயின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது.
படத்துக்குப்பாளர் ஜி.மதனின் படத்தொகுப்பு நேர்த்தியாகவும் இருக்கிறது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கும் பலருக்காக இந்த கதையை கையில் எடுத்திருக்கிறார் இந்த இயக்குநர் பாலாஜி வேணுகோபால்
அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வீட்டுக்குள் வாழ்ந்து வரும் பலருக்காக அவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாதவர்களுக்கு நல்ல அறிவுரையாக மட்டும் இன்றி அதை பொழுதுபோக்கு திரைப்பாடமாக சொல்லாமல் திரைக்கதை மூலம் பக்குவமாக சொல்லி அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய நல்ல திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.
நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர் யோகிபாபுவை இந்த கதைக்கு தேர்வு செய்து, அவரிடம் சரியான அளவு நடிப்பை வாங்கி, திரைக்கதையை வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கும் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்,
தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார் என்பதை இந்த லக்கி மேன் திரைப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.
மொத்தத்தில், இந்த ‘லக்கி மேன்’ திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.!











