ஜோ திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.25/5.
நடிகர் & நடிகைகள் :- ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, சார்லி, அன்புதாசன், ஏகன், விஜே ராகேஷ், இளங்கோ குமணன், ஜெயக்குமார், எம் ஜே ஸ்ரீராம், மற்றும் பலர்,
எழுத்து & இயக்கம் :- ஹரிஹரன் ராம் எஸ்.
ஒளிப்பதிவாளர் :- ராகுல் கேஜி விக்னேஷ்.
படத்தொகுப்பாளர் :- வருண் கே.ஜி.
இசையமைப்பாளர் :- சித்து குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- விஷன் சினிமா ஹவுஸ்.
தயாரிப்பாளர்கள் :- டாக்டர்.டி. அருளானந்து – மாதேவோ அருளானந்து கே.ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன்.
ரேட்டிங் :- 3.25/ 5.
ராமேஸ்வரத்தில் பள்ளி படிப்பை முடித்த கதாநாயகன் ரியோ ராஜ், கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
கதாநாயகன் ரியோ ராஜ் படிக்கும் அதே கல்லூரியில் கேரளாவில் இருந்து கதாநாயகி மாளவிகா மனோஜ் படிக்க வருகிறார்
கதாநாயகி மாளவிகா மனோஜை கண்டவுடன் கதாநாயகன் ரியோ ராஜ் காதல் கொள்கிறார்.
மனசுக்குள்ளே காதலித்து வரும் கதாநாயகன் ரியோ ராஜ், ஒரு கட்டத்தில் தன் காதலை வெளிப்படுத்தி கதாநாயகி மாளவிகா மனோஜை சம்மதிக்க வைக்கிறார்.
ஒரே கல்லூயிரில் படிக்கும் கதாநாயகன் ரியோ ராஜும், கதாநாயகி மாளவிகா மானோஜும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் காதலித்து வருகிறார்கள்.
இவர்களின் காதலுக்கு மாளவிகா மனோஜின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
கதாநாயகன் ரியோ ராஜும், கதாநாயகி மாளவிகா மானோஜும் காதலில் பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தன் காதல் தோல்வியால் தன்னை தானே அழித்துக்கொள்ள நினைக்கும் கதாநாயகன் ரியோ ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார்.
தனது தாய் தந்தை மற்றும் நண்பர்களின் அறிவுரையால் புதிய வாழ்க்கையை கதாநாயகன் ரியோ ராஜ் தொடங்குகிறார்.
இரண்டு விட்டாரின் சமூகத்தின் படி, மற்றொரு கதாநாயகியான பவ்யா டத்ரிகாவை கதாநாயகன் ரியோ ராஜுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
கதாநாயகி பவ்யா த்ரிகா நடந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல், அவர் கதாநாயகன் ரியோ ராஜை கணவராக ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவரை கண்டாலே கோபமடைகிறார்.
கதாநாயகி பவ்யா டத்ரிகாவின் பிரச்சனை என்ன? என்பதை அறிந்து கொள்ள துடிக்கும் கதாநாயகன் ரியோ ராஜ், அவரது பிரச்சனையை தீர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
அதன் பிறகு காதலை போல் திருமணமும் கதாநாயகன் ரியோ ராஜிக்கு தோல்வியில் முடிந்ததா? கதாநாயகி பவ்யா டத்ரிகாவின் பிரச்சனை என்னவென்று கதாநாயகன் ரியோ ராஜ் கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான இந்த ஜோ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஜோ திரைப்படத்தில் கதாநாயகனாக வியோ ராஜ் நடித்திருக்கிறார்.
ஸ்கூல் மாணவராகவும் கல்லூரி மாணவராகவும் கதாநாயகி மாளவிகா மானோஜ் உருகி உருகி காதலிக்கும் கதாநாயகன் ரியோ ராஜ், காதல் தோல்வியால் தன் சோகத்தை வெளிப்படுத்த பெரிய தாடி, முடி என்று இந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய அளவில் உழைத்து இருக்கிறார் என ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது.
இரண்டு கெட்டப்புகளிலும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
காதல் மற்றும் சோகம் ஆகிய இரண்டிலுமே ஓவராக நடிக்காமல் அடக்கி வாசித்திருப்பது திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
இந்த திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக மாளவிகா மனோஜ் நடித்திருக்கிறார்.
அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை மாளவிகா மனோஜ், மிகவும் எளிமையாக இருந்தாலும் அழகில் அருமையாகவும் அற்புதமாகவும் இருக்கிறார்.
கதாநாயகன் ரியோ ராஜ்வுடன் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பவர், அறிமுக கதாநாயகியாக மாளவிகா மனோஜ் காதல் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, கொடுத்த வேலையை குறையில்லாமல் சிறப்பாக செய்திருப்பதோடு, தனது கோபத்தை கண்களினால் சிறப்பாக நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தனக்கு நடந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை தெரியப்படுத்திய பிறகும் கதாநாயகன் ரியோ ராஜ் அவருக்கு தாலி கட்டும் போது, அவர் பார்க்கும் பார்வை மிரட்டலாக உள்ளது.
சார்லி கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் ரியோ ராஜ் வின் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்புதாசன், ஏகன், விஜே ராகேஷ், ஜெயகுமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, திரைக்கதையின் ஓட்டத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராகுல் கே.ஜி.விக்னேஷ் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக திரைப்படமாக்கியிருப்பதோடு, மட்டும் அல்லாமல் கதையில் உள்ள மென்மையை காட்சிகளிலும் கொண்டு வந்து திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் சித்து குமாரின் இசை திரைப்படத்தின் மற்றொரு கதாநாயகனாக பயணித்திருக்கிறார்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையுமே அளவாக கையாண்டிருப்பவர், காதலர்களுடன் திரைப்படம் பார்க்கும் நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார்.
கல்லூரியில் துவங்கும் கதை, காதல், காதலர்களின் ஊடல் மற்றும் கூடல் காட்சிகள் மூலம் ரசிக்க வைத்தாலும், ரசிகர்களின் பழைய நினைவுகளை தட்டி எழுப்பி இருக்கிறார்.
காதல் தோல்விக்காக, வாழ்வை தொலைத்துக் கொள்வதோடு நம்மை சார்ந்தவர்களுக்கு வலியை கொடுக்காமல், அதை கடந்து சென்றால் நமக்கான ஒரு காதல் நிச்சயம் காத்திருக்கும் என்ற மெசஜை மிக அழகாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ்,
மொத்தத்தில், இந்த ‘ஜோ’ திரைப்படம் படு ஜோராக இருக்கிறது ஆனால் போரடிக்கவில்லை.











