ஃபைண்டர் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சார்லி, செண்ட்ராயன், நிழல்கள் ரவி, வினோத் ராஜேந்திரன், தாரணி, பிரணா, நாசர் அலி, கோபிநாத் சங்கர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வினோத் ராஜேந்திரன்.

ஒளிப்பதிவாளர் :- பாபு ஆண்டனி.

படத்தொகுப்பாளர் :- தமிழ் குமரன்

இசையமைப்பாளர் :- சூர்யா பிரசாத் ஆர்.

தயாரிப்பு நிறுவனம் :- அரபி புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- ரஜீஃப் சுப்பிரமணியம் & வினோத் ராஜேந்திரன்.

சார்லி தனது மனைவி மற்றும் மகளுடன் மீன்பிடிக்கும் தொழில் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து கொண்டு மீனவ கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.

அந்த மீனவ கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரிடமும் சீட்டு கம்பெனிக்காக பணம் வாங்கி சீட்டு கட்டி வருகிறார்.

அந்த சீட்டு கம்பெனி மீனவ கிராமத்தில் உள்ள அனைவரிடம் வசூலித்த சீட்டு பணத்தை வாங்கிக் கொண்டு சார்லியை ஏமாற்றி விடுகிறார்கள்.

இதனால் மீனவ கிராமத்தில் இருக்கும் சீட்டு பணம் கட்டிய மக்கள் அனைவரும் பணத்தை சார்லி குடும்பத்தாரும் கட்டிய சீட்டு பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்கிறார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் சீட்டு பணம் கட்டியவர்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும் என்று சார்லி, பணம் தேவைக்காக உறவினர் சென்ராயன் மூலம் செய்யாத குற்றத்திற்காக கொலை பழியை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்கு செல்கிறார்.

ஆறு மாதத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வந்து விடலாம் என கொலை பழியை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்கு செல்லும் சார்லிக்கு ஆயுள் தண்டனையாக அமைக்கிறது.

இந்நிலையில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் கதாநாயகன் வினோத் ராஜேந்திரன், குற்றமே செய்யாமல் சிறை சாலையில் தண்டனை அனுபவித்து வரும் நிரபராதிகள் அனைவரையும் மீட்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

தினசரி செய்தித்தாளின் விளம்பரம் மூலம் குற்றமே செய்யாமல் சிறை சாலையில் தண்டனை அனுபவித்து வரும் நிரபராதிகள் காப்பாற்றுவதாக அறிந்த சார்லியின் மகள் பிரணா, எட்டு வருடங்களாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் தனது தந்தை சார்லியை மீட்டு தருமாறு கேட்கிறார்.

இறுதியில் கதாநாயகன் வினோத் ராஜேந்திரன், சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சார்லியை குற்றவாளி இல்லை என நிரூபித்து வெளியில் கொண்டு வந்தாரா? கொண்டு வரவில்லையா? என்பதுதான் இந்த ஃபைண்டர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஃபைண்டர் திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக வினோத் ராஜேந்திரன், நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அந்தஸ்து இல்லாமல் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

உண்மையான குற்றவாளியை தேடும் முயற்சியிலும் காட்சிகளிலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறார்.

இந்த ஃபைண்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக தாரணி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் வினோத் ராஜேந்திரன் உண்மையான குற்றவாளியை தேடும் முயற்சியிலும் உறுதுணையாக வரும் கதாநாயகி தாரணி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

சார்லியின் நடிப்பு திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

சார்லியின் அனுபவ நடிப்பால், குடும்பத்தினருடன் சந்தோசமாக இருப்பது, பணம் கஷ்டம் வரும்போது வருந்துவது, சீட்டு பணம் கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க போராடுவது, சிறையில் இருந்து கொண்டு குடும்பத்தை பற்றி நினைப்பது என நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கிறார்.

சென்ராயன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த கவனிக்க வைத்தார்.

சார்லியின் மகளாக வரும் பிரணா கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்.

நிழல்கள் ரவி அனுபவ நடிப்பின் மூலம் கவனிக்க வைத்துள்ளார்.

இந்த ஃபைண்ட்ர் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாபு ஆண்டனியின்யின் ஒளிப்பதிவில் மெருகேற்றியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பாபு ஆண்டனியின் ஒளிப்பதிவு காட்சிகள் மூலம் மீனவ கிராமத்தை அழகாக காண்பித்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் சூர்யா பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் சூர்யா பிரசாத்தின் பின்னணி இசையை கதைக்கு தேவையான அளவிற்கு கொடுத்து இருக்கிறார்.

இந்த ஃபைண்டர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் வினோத் ராஜேந்திரன் அவர்களே திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

எந்த ஒரு குற்றமும் செய்யாத பலர் சிறை சாலையில் தண்டனை அனுபவித்து வருபவர்களை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வினோத் ராஜேந்திரன்.

ஆனால், ஒரே மாதிரியான  காட்சிகள் அடுத்தடுத்து வருவது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில், ’ஃபைண்டர் – ப்ராஜெக்ட் 1’ திரைப்படம் சுமார்.

ரேட்டிங் 2.5/5

error: Content is protected !!