பம்பர் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.75/5.

நடிகர் & நடிகைகள் :- வெற்றி, ஹரீஷ் பேரடி, ஷிவானி நாராயணன், கவிதா பாரதி, ஜி பி முத்து,அருவி மதன், ஆதிரா, டைகர் தங்கதுரை, டிட்டோ வில்சன், சீமா ஜி நாயர், அஜய், அஷ்னா, கீர்த்தி, கார்த்திகா, பாரி, முத்து, வீரன், திலிப், கல்கி சௌந்திரயா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எம்.செல்வகுமார்.

ஒளிப்பதிவு :- வினோத் ரத்தினசாமி.

படத்தொகுப்பு :- மு. காசி விஸ்வநாதன்.

இசை :- கோவிந்த் வசந்தா.

தயாரிப்பு நிறுவனம் :-  வேதா பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- எஸ். தியாகராஜா பி.இ. & டி.ஆனந்தஜோதி எம்.ஏ.,பி.எட்.

ரேட்டிங் :- 3.75/5.

தூத்துக்குடியில் கதாநாயகன் வெற்றி மற்றும் நண்பர்கள் மூவருடன் சேர்ந்துசிறு சிறு திருட்டு வேலை குற்றச் செயல்களை செய்து வருகிறார்.

தூத்துக்குடிக்கு புதியதாக காவல்துறை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டு அந்த ஊருக்கு வருகிறார்.

மாற்றம் செய்யப்பட்டு வந்த காவல்துறை அதிகாரி உடனே ரவுடிகள் தாதாக்கள் சுறுசுறு திருட்டுகள் செய்யும் நபர்களை தேடி கண்டுபிடித்து உள்ளே தள்ளுகிறார்.

இந்த லிஸ்டில் கதாநாயகன் வெற்றி மற்றும் அவருடைய நண்பர்கள் பெயரும் இருக்க இவர்களை காவல்துறை தேடுவதால், இவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு மலைக்கு செல்கிறார்.

ஐயப்பன் கோவில் மலைக்கு சென்ற கதாநாயகன் வெற்றி கேரளப் பகுதியில் லாட்டரி சீட்டு விற்கும் ஹரிஷ் பெராடி மீது இரக்கப்பட்டு அவரிடம் இருந்து ரூபாய்.10 கோடி பரிசுக்கொண்ட கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரி சீட்டு வாங்குகிறார்.

அதன் பிறகு கதாநாயகன் வெற்றி அந்த லாட்டரி சீட்டை எங்கே வாங்கினாரோ அங்கேயே தொலைத்து விட்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு திரும்பி வந்து விடுகிறார்..

இதற்கிடையே, கதாநாயகன் வெற்றி வாங்கிய கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக ரூபாய் 10 கோடி முதல் பரிசு விழுந்து விடுகிறது.

கதாநாயகன் வெற்றிக்கு வாங்கிய கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரியில் ரூபாய் 10 கோடி விழுந்த விஷயம் தெரியாத நிலையில், அவரிடம் ரூபாய்.10 கோடி பரிசு விழந்த லாட்டரி சீட்டை எப்படியாவது வெற்றி வாங்கியவரிடம் சேர்த்து விட வேண்டும் என்பதற்காக லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஹரிஷ் பெராடி கதாநாயகன் வெற்றியை தேடி தூத்துக்குடிக்கு வருகிறார்.

அவர் கதாநாயகன் வெற்றியை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்க வில்லையா?, கதாநாயகன் வெற்றிக்கு பம்பர் பரிசுத் தொகை ரூ.10 கோடி கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த பம்பர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் பம்பர் திரைப்படத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

வெற்றி, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ரவுடி கதாபாத்திரத்தில் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்திருந்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்ற விமர்சனத்தை கதாநாயகன் வெற்றி இந்த பம்பர் திரைப்படத்தில் தூள் தூளாக உடைத்தது எறிந்து இருக்கிறார்

ஆட்டம், பாட்டம், ஆக்‌ஷன், காதல் காட்சிகள் என அனைத்திலும் மற்றும் தூத்துக்குடி ஸ்லாங்கில் வசன உச்சரிப்பு தூள் படுத்திருக்கிறார்.

கதாநாயகன் வெற்றியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் இந்த திரைப்படம் வெற்றி திரைப்பட வரிசையில் அமர்ந்திருக்கிறது.

இந்த பம்பர் திரைப்படத்தில் கதாநாயகியாக ஷிவானி நாராயணன் நடித்திருக்கிறார்.

ஷிவானி நாராயணன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஷிவானி நாராயணன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு எடுபடாத பெண்ணாக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை கதாபாத்திரத்தில் ஒன்றிணைவதற்கு முயற்சி செய்திருக்கிறார்.

பம்பர் திரைப்படத்தின் மொத்த கதையையும் ஹரீஷ் பெராடி தனது தோளில் ஒரே ஆளாக தாங்கி நிற்கிறார்.

வயதான லாட்டரி சீட்டு விற்பனையாளராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி மிகவும் நேர்மையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அதிகமான தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி பம்பர் திரைப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததோடு, அந்த கதாபாத்திரத்தை கையாண்ட விதம் கதைக்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

காவல்துறை அதிகாரியாக வரும் அருவி மதன் இந்த காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு மிகவும் அருமையாக பொருந்தி இருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்த அருவி மதன், யதார்த்த நடிப்பை கொடுத்து ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கி விடுகிறார்.

காவலராக வரும் கவிதா பாரதி, துப்பாக்கி பாண்டியாக ஜி.பி.முத்து, கதாநாயகன் அம்மாவாக வரும் ஆதிரா, கதாநாயகன் வெற்றியின் நண்பர்களாக வரும் தங்கதுரை, கல்கி, திலீப், செளந்தர்யா என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள் அனைத்து கதாபாத்திரங்களும் பொருத்தமான தேர்வாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை அவரவர் வழ வைத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு அனைத்து காட்சிகளை மிகவும் பிரமாண்டமாக படம் பிடித்திருப்பது அருமை.

தூத்துக்குடி மற்றும் கேரளப் பகுதிகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பிண்ணனி இசையில் மொத்த திரைப்படத்தையும் வாழ வைத்திருக்கிறார்.

கேரளா கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வைத்துக்கொண்டு குடும்பத்தோடு பார்க்க கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்தது மட்டும் இன்றி சமய ஒற்றுமை, தனிமனித ஒழுக்கம், பணத்தால் மாறும் குணம் என்று பல நல்ல விஷயங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.செல்வகுமார்.

ஒரு லாட்டரி சீட்டில் ஆரம்பிக்கும் கதையும் 10 கோடி ரூபாயில்
திரைக்கதையும் மற்றும் காட்சிகள் முழுக்க முழுக்க நகைச்சுவை உணர்வோடு இருந்தாலும், பணம் ஒருவனை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்பதையும், பணம் மட்டுமே எளியவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் தீர்வு என்பதைம் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் எம்.செல்வகுமார்.

மொத்தத்தில் பம்பர் திரைப்படம்
குடும்பத்தோடு பார்க்க கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது.

error: Content is protected !!