‘டிடி ரிட்டன்ஸ்’ திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.75/5.

  • நடிகர் & நடிகைகள் :- என் சந்தானம், சுர்பி, மசூம் சங்கர், பிரதீப் ராம் சிங் ராவத், மாறன், கிங்ஸ்லி, FEFSI விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனிஷ் காந்த், பிபின், தீனா, சைதை சேது, தங்கதுரை, ரீட்டா, மானஸ்வி, தீபா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எஸ். பிரேம் ஆனந்த்.

ஒளிப்பதிவு :- தீபக் குமார் பதி.

படத்தொகுப்பு :- என்.பி.ஸ்ரீகாந்த்.

இசை :- ஆப்ரோ.

தயாரிப்பு நிறுவனம் :- ஆர்.கே. எண்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர் :- சி.ரமேஷ் குமார்.

ரேட்டிங் :- 3.75/ 5.

1965 ஆம் வருட காலக்கட்டங்களில் புதுச்சேரி மாகாணத்துக்கு ஊர் கடைசி ஒதுக்குப்புறமாக உள்ள மிகப்பெரிய பங்களாவில் ஒரு பிரிட்டிஷ் குடும்பம் மனிதர்களை வைத்து கேம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

அந்த கேமில் வெற்றி பெற்றால் கட்டிய தொகைக்கு இணையாக 50 மடங்கு தொகை கிடைக்கும், கேமில் தோல்வி அடைந்தால் மரணம் மட்டுமே கிடைக்கும்.

இப்படியான பயங்கரமான கேமை நடத்தும் அந்த பிரிட்டிஷ் குடும்பத்தை ஊர் மக்கள் அடித்து கொன்று குடும்பத்தை பங்களாவையும் எரித்து சாம்பலாக்கி விடுகிறார்கள்.

பாண்டிச்சேரியில் பார் உரிமையாளராக இருக்கும் வில்லன் பெப்சி விஜயன் வீட்டில் உள்ள மொத்த பணம் மற்றும் நகை பிபின் மற்றும் முனீஷ்காந்த் இருவரும் சேர்ந்து கொள்ளையடித்து விடுகிறார்கள்.

பிபினிடம் இருந்து மொட்டை ராஜேந்திரன் மற்றும் தங்கதுரை சேர்த்து அந்த பணம் மற்றும் நகை அனைத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்கள்.

அந்த பணம் மற்றும் நகை கதாநாயகன் சந்தானத்திடம் கிடைக்கிறது.

கதாநாயகன் சந்தானம் பணம் மற்றும் நகையுடன் பயணிக்கும் அவருடைய நண்பர்கள் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க, அந்த பிரிட்டிஷ் குடும்பம் இறந்த பங்களாவில் பணம் மற்றும் நகை பையை மறைத்து வைக்கிறார்கள்.

இதற்கிடையே, கொள்ளையடித்த தனது பணம் யாரிடம் இருக்கிறது, என்பதை தெரிந்துக்கொள்ளும் வில்லன் பெப்ஸி விஜயன், கதாநாயகி சுரபியை வைத்து கதாநாயகன் சந்தானத்தை மிரட்டுகிறார்,

பங்களாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம் மற்றும் நகை எடுப்பதற்கு செல்ல, அநத பங்களாவில் இருக்கும் பேய்களிடம் அந்த கேமை விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் சந்தனம் மற்றும் அவருடைய நண்பர்களுடன் தள்ளப்படுகிறார்.

கொள்ளையடிக்கப்பட்ட தனது பணத்தை தேடி வரும் பார் உரிமையாளரான பெப்ஸி விஜயன், மற்றும் பிபின், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவரும் அந்த பேய் பங்களாவில் சிக்கிக்கொண்டு அந்த கேம் விளையாட்டில் பங்கேற்க இறுதியில் அவர்கள் அனைவரும் விளையாட்டில் வெற்றி பெற்றார்களா? வெற்றி பெறவில்லையா? அந்த பங்களாவை விட்டு உயிருடன் வெளியே வந்தார்களா? இல்ல வரவில்லையா? என்பதுதான் இந்த இந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தனம் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சந்தானத்தின் நகைச்சுவை கலந்த நடிப்பை ரசிக்க வைக்கிறது.

தனது ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் எனற நோக்கத்தில் மட்டும் கதாநாயகன் சந்தனம் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சந்தானம், பேசும் டைமிங் வசனங்கள் அனைத்தும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகன் சந்தனம் காமெடியில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தி நடித்திருக்கிறார்.

இந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக சுர்பி நடித்திருக்கிறார்.

கதாநாயகி சுரபி அழகாக வந்து அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சுரபிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கதையோடு இறுதி வரை பயணிக்கிறார்.

மொட்டை ராஜேந்திரனின் வழக்கம்போல் காமெடி அரங்கை அதிர வைக்கிறது.

பார் உரிமையாளராக வரும் பெப்சி விஜயன் பணத்தை பறிகொடுத்து பேயுடன் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகள் காமெடி வில்லனாக அவரை மாற்றி உள்ளது.

காமெடி நடிகராக முன்னேறி வரும் தங்கதுரைக்கு இந்த திரைப்படம் பாலமாக அமைந்துள்ளது.

மாறன், சேது, முனீஷ்காந்த், , பிபின், தீனா, கிங்ஸ்லி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் டைமிங் ஜோக் மூலம் படம் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள்.

வித்தியாசமான பேயாக மிரட்டும் பிரதீப் ராவத், தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவும், திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஆப்ரோவின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இசையமைப்பாளர் ஆப்ரோவின் இசையும் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என நோக்கத்தில் மட்டுமே
சிரிப்பு சரவெடியாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.பிரேம் ஆனந்த்,

திரைப்படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை சிரிக்கும்படியான காட்சிகளை கொடுத்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஏ.பிரேம் ஆனந்த்,

மொத்தத்தில், ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்திற்க்கு குழந்தை குட்டிகளுடன் குடும்பத்துடன் சென்று டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை பார்த்து வயிறு குலுங்க சிரித்து மகிழலாம்.