எரும்பு திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.75/5.

நடிகர் & நடிகைகள் :- சார்லி, M.S. பாஸ்கர், ஜார்ஜ் மரியன், சூசன், மோனிகா சிவா, சக்தி ரித்விக், கமலம், பொம்மி, கங்கானி
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சுரேஷ் G.

ஒளிப்பதிவு :- K.S. காளிதாஸ்.

படத்தொகுப்பு :-  தியாகராஜன் M.

இசை :- அருண் ராஜ்.

தயாரிப்பு நிறுவனம் :-  MANDRU GVS.

தயாரிப்பாளர் :- சுரேஷ் குணசேகரன்.

ரேட்டிங் :- 3.75./ 5.

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே ஒரு கிராமத்தில் விவசாய கூலி யாக இருப்பவர் சார்லி.

சார்லியின் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் மகள் மோனிகா சிவா மற்றும் மகன் சக்தி ரித்விக் சார்லியின் முதல் மனைவி இறந்து விட்டதால் சூசன் ராஜை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார்.

சார்லியும் சூசன் ராஜும் கரும்பு வெட்டி பிழைப்பு நடத்தி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

தன் இரண்டாவது மனைவி சூசனுக்கு ஒரு கைக்குழந்தை. என்னதான் இருந்தாலும், மோனிகா சிவாவும் சக்தி ரித்விக்கும் இருவரும் முதல் மனைவியின் குழந்தைகள்தானே என்ற எண்ணம் சித்தியான சூசனுக்கு மனதில் இருக்கிறது.

அந்த கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் நடத்தி வரும் எம் எஸ் பாஸ்கரிடம் சார்லி வட்டிக்கு 30 ஆயிரம் ருபாய் பணம் வாங்கியிருக்கிறார்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் நடத்தி வரும் எம் எஸ் பாஸ்கரிடம் வாங்கிய பணத்தை சார்லி கொடுக்காததால் வீட்டு வாசலில் வந்து அதிக அளவில் நெருக்கடி கொடுக்க, இன்னும் அடுத்த மாதம் 1ஆம் தேதிக்குள் மொத்த பணத்தையும் வட்டி மற்றும் முதலுடன் தருவதாக சார்லி கூறிவிடுகிறார்.

சூசன் ராஜும் சார்லியும் கரும்பு வெட்டுவதற்காக பக்கத்து ஊருக்கு சென்று வருவதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகும் என்பதால், அதற்குள் மொத்த பணத்தை ரெடி பண்ணி எம் எஸ் பாஸ்கருக்கு சார்லி கொடுத்து விடலாம் என நினைக்கிறார்.

சார்லி மற்றும் சூசன் ராஜ் கரும்பு வெட்டுவதற்காக பக்கத்து ஊருக்கு செனற சமயத்தில், சார்லியின் தாயார் தனது பேரனான சக்தி ரித்விக்கு மோதிரத்தின் மீது ஆசை பட வீட்டில் இருந்த சூசன் ராஜின் கை குழந்தையின் சிறிய மோதிரத்தை தனது பேரனுக்கு அணிந்து விடுகிறார்.

சக்தி ரித்விக் அணிந்திருந்த அந்த மோதிரத்தை தெரியாமல் தொலைத்துவிடுகிறான்.

சக்தி ரித்விக்கும் மோனிகா சிவாவும் மோதிரம் தொலைந்த விஷயம் தன் சித்திக்கு தெரிந்து வந்து கேட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

வட்டிக்கு வாங்கிய பணத்தை சார்லி எம் எஸ் பாஸ்கரிடம் திருப்பி கொடுத்தாரா.? பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லையா?

கரும்பு வெட்ட சென்ற தனது தந்தை மற்றும் தன் சித்தி வீட்டிற்கு வருவதற்குள் தொலைந்த மோதிரத்தை கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த எரும்பு திரைப்படத்தின் மீதிக் கதை.

இரும்பு திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சார்லி நடித்து இருக்கிறார்.

எம் எஸ் பாஸ்கரன் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார்.

மீண்டும் சாரலியை திரைப்படங்களில் பார்த்து ரசிப்பது மிகவும் அற்புதமான ஒரு விஷயமாகதான் இருக்கிறது.

எப்போது போல அவர் நடிப்பில் நம்மை கவர்கிறார் நெகிழ வைக்கிறார் கலங்க வைக்கிறார் தான் ஒரு மகா கலைஞன் என்பதை ஒவ்வொரு திரைப்படத்திலும் நிரூபித்து கொண்டிருக்கிறார்.

சூசன் ராஜ்க்கு திரைப்படத்தில் பெரியதாக வேலை இல்லை என்றாலும் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ஒரு கொடுமையான சித்தி கதாபாத்திரத்தை மிக அருமையாக செய்திருக்கிறார்

இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம் அவருக்கான சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை அற்புதமாக தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ்

ஜார்ஜ் மரியானுக்கு கிடைத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செதுக்கி நடித்திருக்கிறார்.

ஜார்ஜ் மரியன், சிட்டு என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து அசத்தியிருக்கிறார்.

சக்தி மற்றும் மோனிகா இருவரும் படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் இந்த திரைப்படத்தில் ஒரு விதமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தனக்கு கொடுக்கும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்வேன் என்பதை இந்த திரைப்படத்திலும் எம்.எஸ் பாஸ்கர் நிரூபித்திருக்கிறார்

கிராமத்தை பசுமைகளை கண் முன்னே எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே எஸ் காளிதாஸ் ஒளிப்பதிவு மிக மிக சிறப்பு.

ஒளிப்பதிவாளர் கே எஸ் காளிதாஸ் இந்த எரும்பு திரைப்படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

திரைப்படத்தின் இசை மற்றும் பின்னணி பாடல்கள் க்ளைமாக்ஸ் காட்சிக்கு இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலம்.

ஒரு அழகான கதையை கையில் எடுத்து மெதுவாக நகர்த்திச் சென்று திரைக்கதையில் என்னென்ன கூற முடியுமோ அதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ஜி.

மொத்தத்தில் எறும்பு திரைப்படம் மிகவும் இனிப்பான கரும்பு இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கில் சென்று பார்க்கலாம்.

error: Content is protected !!