டிமான்ட்டி காலனி 2 திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- அருள்நிதி, பிரியா பவானிசங்கர், அருண் பாண்டியன், ஆண்டி ஜாஸ்கெலைனன், டிசெரிங் டோர்ஜி, முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலிட், அர்ச்சனா ரவிச்சந்திரன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அஜய் ஆர் ஞானமுத்து.
ஒளிப்பதிவாளர் :- ஹரிஷ் கண்ணன்.
படத்தொகுப்பாளர் :- குமரேஷ் டி.
இசையமைப்பாளர் :- சாம் சிஎஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டரை, ஒயிட்நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட்.
தயாரிப்பாளர்கள் :- பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார்.
ரேட்டிங் :- 3.25/5
கதாநாயகி பிரியா பவானி சங்கரின் காதலித்து திருமணம் செய்த தனது கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கும் நிலையில் ஆனால், திடீர் என்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
அவருடைய ஆத்மா, கதாநாயகி பிரியா பவானி சங்கரிடம் ஏதோ தன் கணவர் எதோ சொல்ல வருவதாக மனதளவில் உணர்கிறார்.
கதாநாயகி பிரியா பவானி சங்கரின் கணவர் எதோ சொல்ல விரும்புவதாக அதற்காக புத்த துறவிகள் உதவியை நாடி அவர்கள் மூலமாக கணவர் மரணத்தில் இருக்கும் பின்னணியை அறிய முயற்சி செய்கிறார்.
அது ஒரு பக்கம் இருக்க ஐதராபாத்தில் வசிக்கும் அண்ணன் கதாநாயகன் அருள்நிதி தனது தந்தையின் சொத்தை அடைய முயற்சி செய்கிறார்.
ஆனால், அதில் தம்பி கதாநாயகன் அருள்நிதி சென்னையில் இருப்பதாகவும் அவருடைய கையெழுத்தை பெற நினைக்க தேடி சென்னைக்கு வருகிறார்
முதல் பாகத்தில் இறந்துப் போன தம்பி கதாநாயகன் அருள்நிதிதான் இவருடைய தம்பி ஆவார் ஆனால் இன்னும் தம்பி கதாநாயகன் அருள்நிதி சாகவில்லை கோமாவில் தான் இருக்கிறார்.
மற்றொரு தம்பி கதாநாயகன் அருள்நீதியை கொன்றால் தனது தந்தையின் சொத்து அனைத்தும் கிடைக்கும் என திட்டமிடுகிறார்.
தன் தம்பி கதாநாயகன் அருள்நீதியை கொல்வ போகும் போதுதான், தம்பி கதாநாயகன் அருள்நிதி இறந்தால் தானும் இறந்துவிடுவோம் என்ற உண்மையை புரிந்துக் கொள்கிறார்.
கதாநாயகி பிரியா பவானி சங்கர், தன்னுடைய கணவன், இறப்பிற்கும், தம்பி கதாநாயகன் அருள்நிதி சாவின் விழிம்பில் இருப்பதற்கும் டிமான்ட்டி காலனிக்கும் உள்ள தொடர்பை கண்டுப் பிடிக்கிறார்.
6 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சம்பவம், சாத்தானுக்கு மனிதர்களை பலியிடும் வழக்கத்தை ஒரு குழு வைத்துள்ளனர்.
இந்த முறை இந்த பலிக்கு ஆளாக போவது அண்ணன் கதாநாயகன் அருள்நிதி மற்றும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவரும், சாத்தானின் பிடியில் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் இந்த டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தில் கதையின் நாயகனாக இரட்டை கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்திருக்கிறார்.
கதாநாயகன் அருள்நிதி இந்த கதைக்கு எந்த அளவிற்கு நடிப்பை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
திகில் காட்சிகளில் நடிப்பின் மூலம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம்.
இந்த டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இந்த டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தில் கத்நாயகியான பிரியா பவானி சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அமானுஷ்யத்திற்கு பயப்படும் காட்சிகளிலும், தனது காதல் கணவனை இழந்த துக்கத்திலும் துயரத்திலும் பரிதவிக்கும் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அர்ச்சனா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் திரைப்படம் பார்க்கவும் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடுகிறார்.
கதாநாயகன் அருள்நிதியின் அட்வகேட் கதாபாத்திரத்தில் வரும் முத்துக்குமார் மிக அருமையாகவும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் அவரது ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களை திகிலடைய செய்ய முயற்சி செய்துள்ளார்.
இசையமைப்பாளர் சாம் சி. எஸின் பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
வழக்கமான ஹாரர் திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் இல்லாமல், இந்த கதைக்கு தேவை இல்லாத பாடல்கள், , பேய்க்கு பிளாஷ்பேக் இல்லாமல் இருப்பது மிகச் சிறப்பு.
கதையின் முதல் பாதியில் திரைக்கதை மிகச்சிறப்பாக அமைந்தாலும், இரண்டாம் பாதியின் திரைக்கதையின் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் நிரைப்படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும்.
மொத்தத்தில் இந்த டிமான்டி காலனி திரைப்படம் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.











