பரிவர்த்தனை திரைவிமர்சனம் ரேட்டிங்;- 1.75/5.
நடிகர் & நடிகைகள் :- சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி, மோஹித், ஸ்மேகா, பாரதிமோகன், திவ்யஸ்ரீதர், ரயில் கார்த்தி, lமற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ்.மணிபாரதி.
ஒளிப்பதிவு :- கே. கோகுல்.
படத்தொகுப்பு :- ரோலக்ஸ்.
இசையமைப்பாளர் :- ரிஷாந்த் அர்வின்.
தயாரிப்பு நிறுவனம்:- M S V புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் :- பொரி. செந்திவேல்.
ரேட்டிங் :- 1.75/ 5.
கல்லூரியில் படிக்கும் களத்தில் இருந்து இணை பிரியாத தோழிகளாக இருக்கும் சுவாதி, ராஜேஸ்வரி) இருவரும் ஒரு நாள் திடீர் என சந்திக்கிறார்கள்.
கதாநாயகன் சுர்ஜித்க்கு மனதில் இருக்கும் விருப்பத்தை கேட்காமலேயே கதாசுவாதி கதாநாயகன் சுர்ஜித்திற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்.
அதில் கதாநாயகி சுவாதி திருமணம் நடந்தது தனது கணவன் கதாநாயகன் சுர்ஜித் கருத்து வேறுபாடு காரணமாக கடமைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
கதாநாயகி ராஜேஷ்வரி சிறுவயதில் தன்னை விட்டுப் பிரிந்த தனது காதலன் கதாநாயகன் சுர்ஜித் நினைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து கொண்டு தனிமையில் வாழ்கிறாள்.
இது ஒரு பக்கம் இருக்க கதாநாயகன் சுர்ஜித் சிறுவயது பிரிந்த தனது காதலியை நினைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் கதாநாயகன் சுர்ஜித், தன் மனைவியாக கதாநாயகி சுவாதியை ஒருநாள் கூட ஏற்றுக் கொள்ள மறுத்து வேண்டா வெறுப்பாக அவளுடன் வாழ்ந்து வருகிறார்.
அப்படியாப்பட்ட சூழலில், தனது கல்லூரி தோழி கதாநாயகி ராஜேஷ்வரியை பார்ப்பதற்காக கிராமத்திற்கு கதாநாயகி சுவாதி
வருகிறார்.
அப்போதுதான் பேச்சுவாக்கில் தெரிகிறது தனது கணவன் கதாநாயகன் சுர்ஜித் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் உயிருக்கு உயிரான காதலி தனது கல்லூரி தோழியான கதாநாயகி ராஜேஷ்வரிதான் என தெரிய வருகிறது.
இந்த நிலையில் கதாநாயகன் சுர்ஜித் மற்றும் கதாநாயகி ராஜேஷ்வரி காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா?
அதன் பின் கதாநாயகி சுவாதி என்ன முடிவெடுத்தார் கணவர் கதாநாயகன் சுர்ஜித் சேர்ந்து வாழ்ந்தாரா? வாழவில்லையா? என்பது தான் பரிவர்த்தனை
திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த பரிவர்த்தனை திரைப்படத்தில் கதாநாயகனாக சுர்ஜித் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்து இருக்கும் சுர்ஜித் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
திரைப்படத்தில் கதாநாயக இருவர் சுவாதி மற்றும் ராஜேஸ்வரி நடித்திருக்கிறார்கள்.
காதலியாக வரும் ராஜேஸ்வரி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
மனைவியாக நடித்திருக்கும் சுவாதி அழகாகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
எந்த மாதிரி நடித்தாலும் மூவரும் சின்னத்திரை நடிகர்கள் என்பதால் சின்னத்திரையில் எப்படி நடிக்கிறார்களோ அதே போல் நடித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே சொன்னதை பேசி விட்டுப் போகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.கோகுல் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் அதிக அளவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒரு சில காட்சிகளில் லைட்டிங் மற்றும் ப்ளீச் ஆகி இருப்பது தெரிகிறது.
இசையமைப்பாளர் ரிஷாந்த் அர்வின் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓரளவிற்கு ஓகே.
படத்தொகுப்பாளர் ரோலக்ஸ் படத்தொகுப்பு சுமார் ரகம்.
வந்த கதையை காப்பி அடித்து கிராமம் பால்காரர் டாக்டர் என ஒவ்வொரு கதாபாத்திரங்களை உருவாக்கி ஏதோ சுமாராக திரைக்கதை அமைத்து அந்த ஏழு நாட்கள் திரைப்படத்திலிருந்து கிளைமாக்ஸ் கட்சியை எடுத்து பரிவர்த்தனை திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.மணிபாரதி.
மொத்தத்தில் பரிவர்த்தனை திரைப்படம் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு மனதை ஈர்க்கவில்லை.











