அகிலன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25. / 5.

நடிகர் நடிகைகள் :- ஜெயம் ரவி பிரியா பவானிசங்கர், தன்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, தருண் அரோரா, மதுசூதன ராவ்
ஹரிஷ் பேரடி, ஹரிஷ் உத்தமன்
ராஜேஷ், தமிழ், மைம் கோபி,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- என் கல்யாண கிருஷ்ணன்.

ஒளிப்பதிவு :- விவேக் ஆனந்த் சந்தோஷம்.

படத்தொகுப்பு :- என்.கணேஷ் குமார்.

இசை :- சாம் சிஎஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட.

தயாரிப்பாளர்:- ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட.

ரேட்டிங் :- 3.25. / 5.

நடிகர் ஜெயம் ரவியை வைத்து பூகோளம் என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் என். கல்யாண கிருஷ்ணன்.

நடிகர் ஜெயம் ரவியை முதன்முறையாக வட சென்னையை சேர்ந்த தனது பூலோம் திரைப்படத்தில் காட்டியிருப்பார்.

இயக்குனர் என். கல்யாண கிருஷ்ணன் 8 வருடங்கள் பிறகு இந்த அகிலன் திரைப்படத்தில் மீண்டும் ஜெயம்ரவியுடன் இணைந்திருக்கிறார்.

சென்னை துறைமுகத்தில் சட்ட விரோதமாக நடக்கும் அத்தனை செயல்களுக்கும் முக்கிய புள்ளியாக வாழ்க்கையில் எந்த விஷயத்திற்கும் கவலைப்படாமல் வாழ்ந்து வருகிறார். கதாநாயகன் ஜெயம் ரவி.

மொத்த கடற்கரை மற்றும் துறைமுகத்துக்கு ராஜாவாக இருக்க விருப்பப்படுகிறார் கதாநாயகன் ஜெயம் ரவி.

அனைவருக்கும் தலைவனாக இருக்கும் வில்லன் கபூரை கதாநாயகன் ஜெயம் ரவி சந்திக்க முயற்சி செய்கிறார்.

அதற்கு முன்னதாக பல பிரச்சனைகளை கதாநாயகன் ஜெயம் ரவி சந்திக்க நேர்கிறது.

அதன்பிறகு பல நாடுகளில் உளவு செய்யும் உளவாளியை கடத்தும் பொறுப்பு கதாநாயகன் ஜெயம் ரவியிடம் வில்லன் கபூர் ஒப்படைக்கிறார்

உளவாளியை கடத்துவதற்கு கதாநாயகன் ஜெயம் ரவி தீவிரமாக முயற்சி செய்கிறார்.

அது ஒரு புறம் இருக்க கதாநாயகன் ஜெயம் ரவியை கைது செய்ய காவல்துறை மிகப்பெரிய திட்டம் தீட்டுகிறது.

இறுதியில் காவல்துறையில் கதாநாயகன் ஜெயம் ரவியை கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா? கடல மற்றும் துறைமுகத்துக்கு தலைவனாக வேண்டும் என கதாநாயகன் ஜெயம் ரவி முயற்சி செய்ய காரணம் என்ன? என்பதுதான் இந்த அகிலன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த அகிலன் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்திருக்கிறார்.

துறைமுக உள்ள கப்பலில் சுமை தூக்கும் வேலை பார்க்கும் கதாநாயகன் ஜெயம் ரவி, அவருக்கே உரித்தான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கோபம், காதல், திட்டமிடல் போன்ற பல உணர்வுகளை எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.

இந்த அகிலன் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் கதாப்பாத்திரத்திற்கு மிக் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

திரைப்படத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் பேரடி ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிசந்திரன் திலீபன் உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

இந்த அகிலன் திரைப்படத்தில் கடல் சார்ந்த கப்பல் உள்ள காட்சிகள் எடுப்பதற்கு மிகவும் கடுமையாக உழைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோஷம்.

ஒளிப்பதிவாளரின் உழைப்பு சில காட்சியில் மிக அப்பட்டமாக தெரிகிறது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை கூடுதல் பலமாக அமைத்து கொடுத்துள்ளார்

துறைமுகம், கடல், கப்பல் என முழுக்க முழுக்க கடற்கரையும், அதனை சார்ந்த இந்த கதைக்களத்தை அமைத்து திரைப்படத்தின் காட்சிகளை காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.

சாதாரண கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டி பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.

மொத்தத்தில் அகிலன் – திரைப்படம் ஒரு முறை பார்க்கலாம்.