“ராமம்ராகவம்” திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சமுத்திரக்கனி, பிரமோதினி, தன்ராஜ் கொரனானி, மோக்‌ஷா, சுனில், ஹரீஸ் உத்தமன், சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தன்ராஜ் கொரனானி.

ஒளிப்பதிவாளர் :- துர்கா கொல்லிபிரசாத்.

படத்தொகுப்பாளர் :- மார்த்தண்ட் கே வெங்கடேஷ்.

இசையமைப்பாளர் :- அருண் சிலுவேறு.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ்.

தயாரிப்பாளர் :- பிரபாகர் ஆரிபாக, ப்ருத்வி போலவரபு.

ரேட்டிங் :- 3.25./5.

சமுத்திரகனி கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மிகவும் நேர்மையான அதிகாரியாக பணிபுரிந்து கொண்டு தனது மனைவி மற்றும் ஒரே மகன் கதாநாயகன் தன்ராஜ் கொரனானி மிகவும் செல்லத்தோடு வளர்த்து வருகிறார்.

சமுத்திரக்கனி மிகவும் கண்டிப்பானவராக இருந்தாலும் தாயின் செல்லத்தால் தாயை கொடுக்கும் ஆதரவினால் மகன் கதாநாயகன் தன்ராஜ் கொரனானி இவரும் ஆதரவு கொடுக்கிறார்.

தன் மகன் கதாநாயகன் தன்ராஜ் கொரனானிதான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் சமுத்திரக்கனி தன் மகன் கதாநாயகன் தன்ராஜ் கொரனானி எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்

அனால் சமுத்திரக்கனியின் மகன் கதாநாயகன் தன்ராஜ் கொரனானி பள்ளிப்பருவத்திலேயே தீய பழக்கங்களுக்கு உள்ளாகி, எந்த வேலை வெட்டிக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊதாரியாகவும் சூதாடியாகவும் இருக்கிறான்.

இதனால் சமுத்திரக்கனிக்கும் மகன் கதாநாயகன் தன்ராஜ் கொரனானி உறவு என்பது மோதலாகவே உள்ள நிலையில் தவறான பாதையில் செல்கிறார்.

தந்தை சமுத்திரக்கனி சொல்லும் சொல்லுக்கு அனைத்துக்குமே நேர் எதிர்மறையாகவே செய்து கொண்டிருக்கும் நிலையில். தான் தொழில் தொடங்குவதாக கூறி தனது தந்தை சமுத்திரகனிடம் ஐந்து லட்சம் கேட்க ஐந்து லட்சம் ரூபாயை கொடுக்கிறார்.

ஆனால் அதை தொழில் தொடங்காமல் அந்த ஐந்து லட்சம் ரூபாயை கிரிக்கெட் பெட்டிங் கட்டி தோற்றுவிடுவார்.

இதனால் தந்தை சமுத்திரக்கனியின் கண்டிப்பு கதாநாயகன் தன்ராஜ் கொரனானி பிடிக்காமல் தனது தந்தை சமுத்திரக்கனி இறந்தால் தந்தையின் வேலை சொத்து மற்றும் தந்தையின் காப்பீடு தொகை அனைத்துமே நமக்கு கிடைக்கும் என்று நட்பாசையில் தந்தையவே கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்.

கதாநாயகன் தன்ராஜ் கொரனானி தனது தந்தையை கொலை செய்ய வேண்டும் என இந்த திட்டத்தை நிறைவேற்றினாரா? இல்லை நிறைவேற்றவில்லையா? என்பதுதான் இந்த ராமம்ராகவம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ராமம்ராகவம் திரைப்படத்தில் தனராஜ் கொரனானி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் தனராஜ் கொரனானி, தந்தைகளின் மனதை புரிந்துக்கொள்ளாமல், எதிரியாக பார்க்கும் பிள்ளைகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் தனராஜ் கொரனானி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

மகன் மீது மனதுக்குள் உள்ள பாசத்தையும் அன்பையும் வெளிக்காட்ட முடியாமல் தடுமாறும் தந்தை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நேர்மையான மனிதர், பாசமிகுந்த அப்பா என மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்கணும் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

சமுத்திரக்கனி தனது மகனின் விருப்பம் என்னவென அறிந்து, மகனுக்காக அதைச் செய்யத் துணிகிறார்.

கதாநாயகன் தனராஜ் கொரனானி தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரமோதினி மிகவும் சிறப்பாக அளித்திருக்கிறார்.

இந்த ராமம் ராகவம் திரைப்படத்தில் கதாநாயகியாக மோக்‌ஷா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மோக்‌ஷா கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

சுனில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் திரைப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறார்.

கதையின் மற்றொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு ஹரீஷ் உத்தமனின் மிக சிறப்பான அளவில் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹரீஷ் உத்தமனின் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் துர்கா கொல்லிபிரசாத், தனது ஒளிப்பதிவு மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அருண் சிலுவேறு இசையில், பாடல்கள் பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக பயணித்து இருக்கிறார்.

திரைக்கதை எழுதி இயக்கி நடித்திருக்கும் இயக்குநர் தனராஜ் கொரனானி, தந்தை – மகன் உறவில் இதுவரை சொல்லாத ஒரு விசயத்தை மிகவும் அழுத்தமாகவும், ஆழமாகவும் கூறியிருக்கிறார்.

திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் தங்களது தந்தையை நினைத்துப் பார்க்கும்படி திரைக்கதை மற்றும் காட்சிகளை மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் தனராஜ் கொரனானி,

மொத்தத்தில், ‘ராமம் ராகவம்’ திரைப்படம் தந்தையின் புனிதம்‌

CLOSE
CLOSE
error: Content is protected !!