பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராமனாதன் காலமானார்!!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராமனாதன் காலமானார்!!!

சென்னை 07 ஏப்ரல் 2025 பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் M.ராமனாதன்( 72) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை ( திங்கட்கிழமை)  காலமானார்.

நடிகர் சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இவரது தயாரிப்பில் , வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி, பிரம்மா, உடன்பிறப்பு, வில்லாதி வில்லன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

புரட்சி கலைஞர் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்ச் செல்வன் திரைப்படத்தையும் தயாரிப்பாளர் ராமனாதன் தயாரித்துள்ளார்.

இவருக்கு பிரமிளா என்ற மனைவியும், காருண்யா, சரண்யா ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

இருவரும் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் சென்னை வந்ததும் புதன்கிழமையன்று சென்னையில் இறுதி சடங்குகள் நடைபெறும்.

error: Content is protected !!