தொடரும் – திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் – மோகன்லால், ஷோபனா, மனியன்பில்லா ராஜூ, இர்ஷாத் அலி, பிரகாஷ் வர்மா, பினு பப்பு, பர்ஹான் பாசில், தாமஸ் மேத்யூ, அம்ரிதவர்ஷினி
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – தருண் மூர்த்தி.

ஒளிப்பதிவாளர் – ஷாஜி குமார்.

படத்தொகுப்பாளர் – ஷபீக் நிஷாத் யூசுப்.

இசையமைப்பாளர் – ஜேக்ஸ் பிஜோய்.

தயாரிப்பு நிறுவனம் – ரேஜாபுத்ரா விஷுவல் மீடியா

தயாரிப்பாளர் – எம். ரஞ்சித்.

ரேட்டிங் – 3.5/5.

தமிழ் திரைப்பட உலகில் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய கதாநாயகன் மோகன்லால், ஒரு படப்பிடிப்பில் போது விபத்தால் ஸ்டண்ட் நடிகர் பணியை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, பணிபுரிந்து கொண்டு தன் மனைவி ஷோபனா மற்றும் பள்ளிக்குச் செல்லும் மகள் அம்ரிதவர்ஷினி கல்லூரி படிக்கும் மகன் தாமஸ் மேத்யூ, மகனுடன் தன்னுடைய குடும்பம் தான் உலகம் என வாழ்ந்து வருகிறார்.

தன் குடும்பத்தின் மீது எவ்வளவு பாசம் இருக்குமே அதேபோலவே, கதாநாயகன் மோகன்லால் வைத்திருக்கும் பழைய அம்பாசிடர் கார் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார்.

இந்நிலையில், கதாநாயகன் மோகன்லால் தனது அம்பாசிடர் காரை தனது மகன் மற்றும் நண்பர்கள் அந்த காரை எடுத்து ஓட்டி சிறிய விபத்து ஏற்பட்டதால் சிறிய பழுது காரணமாக மெக்கானிக் செட்’டில் கொண்டு விடுகிறார்

இதற்கிடையே, கதாநாயகன் மோகன் லால் ஊரில் இல்லாத நேரத்தில், கதாநாயகன் மோகன்லாலின் அம்பாசிடர் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்த காரை காவல் நிலையத்தில் வைத்துவிடுகிறது.

கதாநாயகன் மோகன்லால் ஊரில் இருந்து திரும்பும் போது தனது அம்பாசிடர் கார் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீட்க போராடுகிறார்.

காவல்துறை துணை ஆய்வாளர் பினு காரை கொடுக்க முடியாது என்று முரண்டு பிடிக்கும் காவல்துறை துணை ஆய்வாளர் பினு காவல்துறை ஆய்வாளர் பிரகாஷ்வர்மாவின் கருணையால் கதாநாயகன் மோகன்லால் தன்னுடைய காரை திரும்ப பெற்றுக்கொள்கிறார்.

அதே சமயம், அன்று இரவு அந்த அம்பாசிடர் காரில் துணை ஆய்வாளர் பினு ஆய்வாளர் பிரகாஷ்வர்மா மற்றும் காவலர்கள் திருமணத்திற்கு செல்வதற்காக கதாநாயகன் மோகன்லால், இவர்களுடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

இந்த நிலையில் அன்று இரவு பயணம் மேற்கொள்ளும் கதாநாயகன் மோகன்லால் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பயணமாக அமைகிறது.

கதாநாயகன் மோகன்லாலுக்கு அந்த பயணத்திற்கு பிறகு என்ன நடந்தது இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது என்பதுதான் இந்த தொடரும் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தத் தொடரும் திரைப்படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் மோகன்லால் பென்ஸ் என்கிற கதாபாத்திரம் மற்றும் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் பொறுப்பான குடும்ப தலைவர், தன் பிள்ளைகளிடம் எதார்த்தமாக பழகும் தந்தை, சிறு சிறு குறும்புத்தனம் மூலம் மனைவியிடம் காதலை வெளிப்படுத்துவது என்று நடிப்பின் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

தனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு பழி வாங்குவதற்காக ஆக்ரோஷமாக மாறி களம் இறங்கும் போது, மாஸான சண்டைக்காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

கதாநாயகன் மோகன்லாலின் மனைவி. கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷோபனா, தன் அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் வர்மா, வில்லத்தனத்தில் சிரித்துக்கொண்டே நடிப்பின் மூலம் மிரட்டியிருக்கிறார்.

காவல்துறை துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பினு பப்புவின் நடிப்பிலும் எந்த விதமான குறையும் இல்லை.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா, இளவரசு அனுபவ நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பர்ஹான் பாசில், கதாநாயகன் மோகன்லால் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாமஸ் மேத்தீவ், மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமிர்தவர்ஷினி, ஷாஜி அடிமல்லி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அளவான நடிப்பை கொடுத்து திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் துணை நிற்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு, மூலம் மலை, வனம், மழை என இயற்கையோடு அவைகளையும் கதையின் மாந்தர்களாக ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் பயணிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

திரைபபடத்தின் தொடக்கத்தில் நிலச்சரிவு, கார் மீது கதாநாயகன் மோகன்லாலுக்கு வைத்து இருக்கும் பாசப்பிணைப்பு ஆகியவற்றின் மூலம் முதல் பாதி கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் தருண் மூர்த்தி, இரண்டாவது பாதியில் பார்வையாளர்களின் யூகத்தின்படி திரைக்கதையை அமைத்திருந்தாலும், வழக்கமான பழிவாங்கும் திரைக்கதையை மிக எதிர்பார்ப்புடனும், அருமையாக  இயக்கியிருக்கிறார் இயக்குநர் தருண் மூர்த்தி.

மொத்தத்தில், ‘தொடரும்’ அனைத்து குடும்பங்களும் குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!