ஃபயர் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பாலாஜி முருகாதாஸ், சாந்தினி தமிழரசன் சாக்ஷி அகர்வால், ரச்சிதா மஹாலட்சுமி, காயத்ரி ஷான், Jsk, சிங்காம்புலி, ஜீவா எஸ் கே. சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜே எஸ் கே.
ஒளிப்பதிவாளர் :- சதீஷ் ஜி.
படத்தொகுப்பாளர் :- சிஎஸ் பிரேம்குமார்.
இசையமைப்பாளர் :- டி.கே.
.
தயாரிப்பு நிறுவனம் :- ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன்.
தயாரிப்பாளர்:- ஜே எஸ் கே.
ரேட்டிங் 3.5./5.
பிசியோதெரபி மருத்துவரான கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் க்ளீனிக் ஒன்றை நடத்தி வருகிறார்.
கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் திடீரென்று ஒரு நாள் காணாமல் போகவே அவருடைய பெற்றோர் தனது மகனைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்கின்றனர்.
பிசியோதெரபி மருத்துவரான கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் காணாமல் போனதை பற்றி காவல்துறை ஆய்வாளர் ஜே எஸ் கே விசாரிக்கத் துவங்குகிறார்.
பிசியோதெரபி மருத்துவரான கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் காணாமல் போன வழக்கு பற்றி விசாரணை தீவிரப்படுத்தி காவல்துறை ஆய்வாளர் ஜே எஸ் கே விசாரணை செய்யும் நபர்கள் அனைவரும் கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் அனைவரும் நல்ல முறையிலே கூறுகிறார்கள்.
இந்த நிலையில், கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் தான்தான் கொலை செய்ததாக பெரியவர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைகிறார்.
அதன் பின், பிசியோதெரபி மருத்துவரான கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் உயிரோட இருப்பதாகவும் அவருடைய பெற்றோர்கள் தங்களிடம் போனில் பேசியதாகவும் காவல்துறையிடம் கூறுகிறார்கள்.
காணாமல் போன பிசியோதெரபி மருத்துவரான கதாநாயகன் பாலாஜி முருகதாசை யார் கடத்தினார்கள் அவர் உயிரோடு இருக்கிறாரா? உயிரோடு இல்லையா? அவர் காணாமல் போனதற்கான மர்மம் தான் என்ன.? என்பதுதான் இந்த ஃபயர் திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த ஃபயர் திரைப்படத்தில் கதாநாயகனாக பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் பாலாஜி முருகதஸ். ரொமாண்டிக் காட்சிகளில் மிக அருமையாக நடித்திருந்தாலும் மற்ற காட்சிகளில் நடிப்பதற்கு கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜே எஸ் கே, மிக மிடுக்காக தோன்றியிருந்தாலும், ஒரு சில காட்சிகளில் மிகவும் அசால்டாக நடித்திருக்கிறார்.
இந்த ஃபயர் திரைப்படத்தில் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மஹாலட்சுமி காயத்ரி ஷான் நான்கு கதாநாயகிகள்
நடித்திருக்கிறார்.
இந்த நான்கு கதாநாயகிகளின் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மஹாலட்சுமி காயத்ரி ஷான் கதாபாத்திரங்கள் கதைக்கு மிகவும் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
இந்த நான்கு கதாநாயகிகளும் ஒரு பெண் எந்த ஒரு சூழ்நிலையில் தவறான ஆணிடம் தன்னை இழந்து விடுகிறார்கள் என்பதை மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் மிகவும் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் டி.கே இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இப்படி ஒரு கதையை, மிகச்சரியான நேரத்தில், சமூகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை பேசுவதற்கு கூட ஒரு தைரியம் இல்லாத பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படிப்பட்ட திரைப்படங்கள் கண்டிப்பாக வரவேண்டும்.
இந்த சமுதாயத்தில் கொடூரமான எண்ணம் கொண்ட ஆண்களிடம் பெண்கள் எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை இப்படி ஒரு திரைப்படத்தை மிகவும் தைரியமாக வெளிச்சம் போட்டு மக்களிடத்தில் கொண்டு சேர்த்திருக்கும் இயக்குனர் ஜே எஸ் கே அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
மொத்தத்தில் – ஃபயர் திரைப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வு படைப்பாக அமைந்துள்ளது.