’தக் லைஃப்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், பகவதி பெருமாள், ஐஸ்வர்யா லட்சுமி, சின்னி ஜெயந்த், வையாபுரி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மணிரத்னம்.

ஒளிப்பதிவாளர் :- ரவி.கே. சந்திரன்.

படத்தொகுப்பாளர் :- ஏ. ஸ்ரீகர் பிரசாத்.

இசையமைப்பாளர் :- ஏ.ஆர்.ரஹ்மான்.

தயாரிப்பு நிறுவனம் :- ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

தயாரிப்பாளர்கள் :- கமல்ஹாசன், ஆர். மகேந்திரன், மணிரத்னம், சிவா ஆனந்த், உதயநிதி ஸ்டாலின்

ரேட்டிங்:- 3./5.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கதாநாயகன் கமல்ஹாசன் அவரது குழுவினர் டெல்லியில் மிகப்பெரிய அளவில் பலம் வாய்ந்த தாதாக்களாக வலம் வருகிறார்கள்.

காவல்துறையினர் மற்றும் தாதாவான கதாநாயகன் கமலஹாசன் குழுவினர் இரு தரப்புக்கும் இடையிலான துப்பாக்கி சண்டையில் அப்பாவிமான குமரேசன் கொல்லப்படுகிறார்.

அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த குமரேசனின் மகனை கதாநாயகன் கமல்ஹாசன் காப்பாற்றுகிறார்.

அந்த நடந்த துப்பாக்கி சண்டையின் போது தொலைந்த குமரேசனின் மகனிடம் உனது தங்கையை கண்டுபிடித்து தருவதாக சத்தியம் செய்வதோடு, தன்னை போன்ற துப்பாக்கி சண்டையில் காப்பாற்றப்பட்ட அந்த சிறுவனை ஒரு மிகப்பெரிய தாதாவாகவும் கதாநாயகன் கமல்ஹாசன் வளர்த்து வருகிறார்.

அப்படி வளர்க்கப்பட்ட அந்த சிறுவன் தான் மற்றொரு கதாநாயகன் சிலம்பரசன் டி ஆர் இளம் வயதிலேயே தொழிலில் கற்றுக்கொண்டு மிகப் பெரிய தாதாவாக கதாநாயகன் கமல்ஹாசன் பொறாமைப்படும் அளவுக்கு சிலம்பரசன் டி ஆரின் வளர்ச்சி இருக்கிறது.

கதாநாயகன் கமல்ஹாசன் போலவே உள்ளவர்களுக்கும் சிலம்பரசன் டி ஆரின் மீது பொறாமை கொள்ளும் இவர்களுக்குள் இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு பொறாமையும், வன்மமும் ஏற்படுவதால் அதுவே கதாநாயகன் கமலஹாசனுக்கு இந்திய பெரிய அளவில் துரோகமாக வளர்ந்து நிற்கிறது.

இந்த நிலையில் கதாநாயகன் கமலஹாசனின் மீதுள்ள துரோகத்தினால் மிகப்பெரிய அளவில் வளர்ந்த சாம்ராஜ்யம் சரிந்ததா? சரியில்லையா? அல்லது துரோகிகளை சரிந்தார்களா? என்பதுதான் இந்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “தக் லைஃப்” திரைப்படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசன் நடித்திருக்கிறார்.

இந்த “தக் லைஃப்” திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக சிலம்பரசன் டி ஆர் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் கமல்ஹாசனால் சிறு வயது முதல் வளர்க்கப்படும் சிலம்பரசன் டி ஆரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் சிலம்பரசன் டி ஆர் ஆக்‌ஷன், கதாநாயகி திரிஷாவுடன் ஒன்சைடு ரொமான்ஸ் என தனது வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்.

இந்த “தக் லைஃப்” திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார்.

இரண்டு கதாநாயகர்களின் கதாநாயகியாக நடித்திருக்கும் திரிஷா கொடுத்த வேலையை மிக சிறப்பாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் கமல்ஹாசனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி, கதாநாயகன் கமல்ஹாசனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர், மற்றொரு கதாநாயகனாக சிலம்பரசன் டி ஆரின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, காவல்துறை அதிகாரி அசோக் செல்வன், கதாநாயகன் கமல்ஹாசன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் நடிப்பை நிறைவாக கொடுத்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் “ஜிங்குஜா ஜிங்குஜா…” பாடல் மட்டுமே ஆட்டம் போட வைப்பதோடு முணுமுணுக்க வைக்கிறது.

இசையமைப்பாளர்  ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

தாதாக்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் துரோகங்களையும் மையமாக வைத்து கதை மற்றும் திரைக்கதை அமைத்திருந்தாலும், அதை அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

மொத்தத்தில், ‘தக் லைஃப்’ திரைப்படம் ஏற்கனவே அரைத்த மாவு அரைத்து இருக்கிறார்.

error: Content is protected !!