‘லெக் பீஸ்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் – யோகி பாபு, கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், டி டிவி கணேஷ், ரவி மரியா, ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மரிமுத்து, சாம்ஸ், மதுசூதன ராவ், ஸ்ரீநாத், அஸ்மிதா, மணிகண்டன். மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் – ஸ்ரீநாத்.
ஒளிப்பதிவாளர் – மாசாணி.
படத்தொகுப்பாளர் – இளையராஜா எஸ்.
இசையமைப்பாளர் – ஜார்ன் சுராவ்.
தயாரிப்பு நிறுவனம் – ஹீரோ சினிமாஸ்.
தயாரிப்பாளர் – சி மணிகண்டன்.
ரேட்டிங் – 3.5./5.
கதாநாயகன்கள் கருணாகரன் கிளி ஜோசியம் பார்ப்பதும் ரமேஷ் திலக் பல குரலில் பேசி சம்பாதித்து வருவதும் ஸ்ரீநாத் அமானுஷ்யங்களையும் பேய்களை விரட்டுவராகவும், மணிகண்டன் சவுரி முடி வாங்கும் வியாபாரம் செய்பவராக நால்வரும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
கதாநாயகன் மணிகண்டன் வண்டியில் வரும்போது சாலையில் 2000 ரூபாய் நோட்டு ஒன்று கிடைக்கிறது.
அந்த 2000 ரூபாய் நோட்டு மூலம் கதாநாயகன் மணிகண்டனுடன், கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத் ஆகிய மூவரும், அதே 2000 ரூபாய் நோட்டின் மூலம் நண்பர்களாக ஒன்று சேர்கிறார்கள்.
அதே 2000 ரூபாய் நோட்டின் மூலம் மணிகண்டன், ஸ்ரீநாத், கருணாகரன் ரமேஷ் திலக் மிகப் பெரிய அளவில் பிரச்சனையும் வருகிறது.
இந்த நிலையில் மிகப்பெரிய அளவில் வந்த பிரச்சனையில் இருந்து மணிகண்டன், ஸ்ரீநாத், கருணாகரன், ரமேஷ் திலக், அந்த 2000 ரூபாய் நோட்டினால் வந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா?, தப்பிக்க வில்லையா?, என்பதுதான் இந்த ‘லெக் பீஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “லெக் பீஸ்” திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக மணிகண்டன், கருணாகரன், ஸ்ரீநாத், ரமேஷ் திலக், நடித்திருக்கிறார்கள்.
இந்த லெக் பீஸ் திரைப்படத்தில் சவுரி முடி வியாபாரம் செய்யும் குயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டன், கிளி ஜோதிடம் பார்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன், அமானுஷ்ய சக்திகளை விரட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநாத், பலகுரல் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமேஷ் திலக் என நான்கு பேரும் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்ற கதா பத்திரங்கள் போலவே பசி பட்டினியோடு சுற்றி திரிந்தாலும், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து விட்டார்கள்.
யோகி பாபு, தன்னுடைய வழக்கமான பாணியின் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார்.
விடிவி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் அஸ்மிதா என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய அனுபவமான நடிப்பு மூலம் திரைப்படத்தை தோளில் சுமந்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மாசாணியின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்து லிரைப்படத்திற்கு மிகப் பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இந்த ‘லெக் பீஸ்’ திரைப்படத்தில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படத்தையும் இயக்கவும் செய்திருக்கும் ஸ்ரீநாத், அதிகளவில் நடிகர்கள் இருந்தாலும், அவர்களை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத்.
கிரைம் திரில்லர் ஜானரை நகைச்சுவை பாணியில் சொல்ல முயற்சித்திருப்பதோடு நகைச்சுவை நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டு நகைச்சுவை திருவிழாவை போன்று இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத்.
மொத்தத்தில், இந்த ‘லெக் பீஸ்’ திரைப்படம் சிரிப்பு திருவிழா.











