“குபேரா” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- தனுஷ், ‘கிங்’ நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தஹில், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சேகர் கம்முலா.
ஒளிப்பதிவாளர் :- நிகேத் பொம்மி.
படத்தொகுப்பாளர் :- கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்.
இசையமைப்பாளர் :- தேவி ஸ்ரீ பிரசாத்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர்கள் :- சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ்
ரேட்டிங் :- 3.75/5.
இந்திய கடல் உட்பட்ட பகுதியில் மிகப்பெரிய அளவில் எரிவாயு இருப்பதை இந்தியாவில் இருக்கும் ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவன அதிபர் எரிவாயு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்கிறார்கள்.
அந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் இந்திய அளவில் மிகப்பெரிய தனியார் நிறுவன அதிபரிடம் மிகவும் சுத்தமான எரிவாயு இருப்பதை கூறுகிறார்.
அந்த எரிவாயு கிடைத்தால் இந்திய அளவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்கிறார்.
இதையறிந்த இந்தியாவில் இருக்கும் ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவன அதிபர் இந்திய அரசாங்கத்தில் ஒன்றிய அமைச்சரிடம் பேரம் பேசி அந்த எரிவாயு ஒப்பந்தத்தை எங்களுடைய நிறுவனத்திற்கு கொடுக்குமாறு கேட்கிறார்.
உங்கள் நிறுவனத்திற்கு அந்த எரிவாயு ஒப்பந்தத்தை கொடுக்க வேண்டும் என்றால் எங்களது ஒன்றிய அமைச்சர்களுக்கு ஒரு லட்சம் கோடி எங்களுக்கு கொடுக்க வேண்டும் என அமைச்சர் கூறுகிறார்.
ஒன்றிய அரசுக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டிய அந்த ஒரு லட்சம் கோடியை எப்படி கை மாற்ற முடியும் என யோசிக்க சிறையில் இருக்கும் நேர்மை தவறாத முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகர்ஜுனாவை மிகப்பெரிய தனியார் நிறுவன அதிபர் நாடுகிறார்கள்.
நேர்மை தவறாத முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகர்ஜுனா இந்தப் பணத்தை பத்திரமாக கை மாற்றுவதற்கு எந்த விதமான அடையாளமும் , படிப்பறிவில்லாத ஒரு சில பிச்சைக்காரர்கள் வேண்டும் என கூறுகிறார்.
அதன்படி ஒரு சில பிச்சைக்காரர்களை பினாமியாக்கி அவர்களின் பெயரில் வெளிநாடுகளில் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் லஞ்சப் பணத்தை இந்தியாவிற்கு கைமாற்றி தர சிபிஐ அதிகாரியான
நாகர்ஜுனா முடிவு செய்கிறார்.
அதன்படி நான்கு பிச்சைக்காரர்கள் தேர்ந்தெடுத்து பினாமியாக்குகிறார்கள்.
நான்கு பிச்சைக்காரர்களில் ஒருவர் கீழ் திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் தனுஷ்.
பினாமி என்ற பெயரில் இருக்கும் நான்கு பிச்சைக்காரர்களை பெயரில் உள்ள பணம் கைமாறியவுடன் அவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர்.
இந்த சதியை அறிந்த கதாநாயகன் தனுஷ் தனியார் நிறுவன அதிபர் கொல்ல கூட்டத்திடமிருந்து தப்பித்து வருகிறார்.
தப்பி சென்ற கதாநாயகன் தனுஷ் தேடி பிடிப்பதற்கு தனியார் நிறுவன அதிபரின் ஆட்கள் வைத்து அனைத்து ஏரியாக்களிலும் தேடுகின்றனர்.
தனியார் நிறுவன அதிபர் ஆட்கள் இடம் இருந்து கதாநாயகன் தனுஷ் உயிர் தப்பினாரா? உயிர் தப்ப வில்லையா? பினாமியாக பெயரில் வங்கியில் போடப்பட்ட பத்தாயிரம் கோடி ரூபாயை என்ன செய்கிறார்
பிச்சைக்காரராக இருக்கும் கதாநாயகன் தனுஷ் குபேரனாக மாறினாரா? குபேரனாக மாறவில்லையா? என்பதுதான் இந்த குபேரா திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த குபேரா திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார்.
பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் தனுஷ் முகத்தில் தாடி, அழுக்கு சட்டை, உடைந்த கை விரல்கள் பிச்சைக்காரராக நடுவீதியில் ஓட்டம் என பிச்சைக்காரருக்கு உரித்தான உடல் மொழியில் தன் கதாபாத்திரத்திற்கு மிகவும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் இப்படியான ஒரு தனுஷ் போன்ற நடிகர் கிடைத்திருப்பது தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்றே கூறலாம்
மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்துள்ளார்.
நேர்மை தவறாத சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகார்ஜுனா தனது கதாபாத்திரத்தில் எந்தவித தொய்வும் இல்லாமல் பல காட்சிகளில் கண்களாலே பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்து மிக அழகாக வந்து தனது நடிப்பை அருமையாக கொடுத்திருக்கிறார்.
இந்த குபேரா திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, மிகவும் யதார்த்தமான கதாபாத்திரமாக உள்ளே வந்து கதாநாயகன் தனுஷிடம் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரமாக தனது கதாபாத்திரத்தை மிகவும் அழகாக வந்து மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், ஜிம் சர்ப், இவருக்கான பிஜிஎம், இவரின் உடல் மொழி, இவருக்கான நடை உடை தனது வில்லத்தனத்தை தனது முகத்திலே காட்டி அனைவரையும் மிரள வைக்கிறார்.
சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர், மற்றும் பக்ஸ் ,பாக்கியராஜ் உள்ளிட்ட நடிகர்களும் தங்களின் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு மூலம் திரைபடத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்று விட்டது.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தனக்கான மாசான இசையை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
எவராலும் யூகிக்க முடியாத அளவில் இதுவரை யாரும் தொடாத ஒரு கதையை கையில் எடுத்து அதை மிகவும் நுட்பமாக தனது திரைக்கதை மூலமாக நகர்த்திச் சென்று நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சேகர் கமுலா.
இந்த இந்திய திருநாட்டில் பணம் இருப்பவர்கள் தான் மனிதர்கள், பணம் இல்லாமல் பிச்சை எடுக்கும் மனிதர்கள் மீதான ஒரு வகையான பார்வையை இந்த குவேரா திரைப்படம் நிச்சயமாக மாற்றும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
மொத்தத்தில், – இந்த குபேரா ஒரு பிச்சைக்காரன் குபேரனாக வெற்றி பெற்றான்!











