கீனோ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் – மஹாதாரா பாகவத், ரேனுசதீஷ், காந்தர்வா, மாஸ்டர் சிவா, சுகந்த், சிவம், ஆர்.கே.திவாகர், ராஜேஷ் கோபிசெட்டி, அண்ணாமலை, கண்ணதாசன், சுந்தர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் – ஆர்.கே.திவாகர்.
ஒளிப்பதிவாளர் – ஆலிவர் டானி.
படத்தொகுப்பாளர் – கிருத்திகா காந்தி.
இசையமைப்பாளர் – ஆர்.கே.திவாகர்.
தயாரிப்பு நிறுவனம் – கந்தர்வா செல்லுலாய்டு கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் – கிருத்திகா காந்தி, மஹாதாரா பாகவத், ஆர்.கே.திவாகர்
ரேட்டிங் – 3./5.
தந்தை மகாதாரா பகவத் மற்றும் மனைவி ரேணு சதீஷுக்கு 15 வயது மகன் கந்தர்வா மகனாக வருகிறார்.
தனியார் கார் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் தந்தை மகாதாரா பகவத் தாய் ரேணு சதீஷ் சிறிது நாட்களிலேயே பணி காரணமாக வெளிநாடு சென்று விடுகிறார்.
தாய் இல்லாமல் தந்தை அரவணைப்பில் தனியாக இருக்கும் கந்தர்வா இருண்ட இடத்தை பார்த்தால் ,அங்கு கருப்பு உடை அணிந்த உருவம் ஒன்று தான் கீனோ என்றும் என்னிடம் வா என்றும் தொடர்ந்து கந்தர்வாவை அழைத்துக் கொண்டே இருக்கும்.
வீட்டிலும் மட்டுமல்லாமல், ரோட்டிலும் சரி, தனியாக இருக்கும் அனைத்து காலி இடத்தைக் கண்டாலே அந்த கீனோ என்றஉருவம் கந்தர்வாவை பயமுறுத்துவதோடு மட்டுமல்லாமல் தன்னிடம் வா தன்னிடம் வா என அழைத்துக் கொண்டே இருக்கிறது.
இந்த கீனோ தொடர்ச்சியாக கந்தர்வாவிற்கு மிரட்டி கொண்டே இருக்கும் நிலையில். தொடர்ந்து சாமியார்கள் சிலரை அழைத்து வந்து அது ஒரு அமானுஷ்யத்தை
தந்தை மகாதாரா பகவத் கண்டு பிடிக்க முயற்சிக்கிறார்.
இறுதியில் இந்த கீனோ என்ற உருவம் என்ன என்பதை கண்டுபிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த கீனோ திரைப்படத்தின் மீதிக்கதை.
தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹாதாரா பாகவத், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரேனுசதீஷ், மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காந்தர்வா, மூவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அதிலும் கந்தர்வாவின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது திரைப்படத்தின் ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.
திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் அறிந்து நடிப்பில் யாரும் குறை கூற முடியாத அளவிற்கு கனக்கச்சிதமாக தங்களது கதாபாத்திரங்களே உணர்ந்து நடித்திருந்தனர்.
ஒளிப்பதிவாளர் ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவு மூலம் மிகவும் வித்தியாசமாக காட்சிப்படுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆர்.கே. திவாகர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத ஒரு வித்தியாசமான கதைகருவை கையில் எடுத்து அதை மிகவும் திறமையாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்
ஆர்.கே. திவாகர்.
மொத்தத்தில் கீனோ தமிழ் திரைப்பட உலகில் ஒரு புதுமையான முயற்சி.











