‘மாரீசன்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் நடிகைகள்:-வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், P L தேனப்பன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா, ஹரிதா முத்தரசன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுதீஸ் சங்கர்.
ஒளிப்பதிவாளர் :- கலை செல்வன் சிவாஜி.
படத்தொகுப்பாளர் :- ஸ்ரீஜித் சாரங்.
இசையமைப்பாளர் :- யுவன் சங்கர் ராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- சூப்பர் குட் பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- R B சௌத்ரி,
ரேட்டிங் :- 2.75/5.
சிறுசிறு திருட்டுத்தனம் செய்து விட்டு பாளையங்கோட்டை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து கதாநாயகன் பகத் பாசில்
விடுதலை பெற்று வெளியில் வருகிறார்.
சிறையில் இருந்து வெளியில் வந்த கதாநாயகன் பகத் பாசில் ஒரு வீட்டில் திருடுவதற்காக நுழைய அங்கே மற்றொரு கதாநாயகன் வடிவேலுவை சங்கிலியால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்.
மற்றொரு கதாநாயகன் வடிவேலு என்னை இங்கிருந்து வெளியில் அழைத்து சென்றாள் நான் உனக்கு பணம் தருகிறேன் என்று கூற கதாநாயகன் பகத் பாசில் மற்றொரு கதாநாயகன் வடிவேலு இருவரும் ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
மற்றொரு கதாநாயகன் வடிவேலு ஏடிஎம் சென்டரில் பணம் எடுக்கும் நிலையில் அக்கவுண்டில் 25 லட்சம் பணம் இருப்பதை தெரிந்துக் கொள்ளும் கதாநாயகன் பகத் பாசில், மற்றொரு கதாநாயகன் வடிவேலு இடம் இருக்கும் பணத்தை எப்படியாவது பறிப்பதற்காக மற்றொரு கதாநாயகன் வடிவேலு உடன் கதாநாயகன் பகத் பாசில் தொடர்ந்து பயணிக்கிறார்.
ஆனால், கதாநாயகன் பகத் பாசிலுடன் பயணித்தாலும், அவருக்கே தெரியாமல், அவரது அடையாளங்களைப் பயன் படுத்தி சிலரை தேடிப் பிடித்து மற்றொரு கதாநாயகன் வடிவேலு கொலை செய்கிறார்.
மற்றொரு கதாநாயகன் வடிவேலு யார்?, மற்றொரு கதாநாயகன் வடிவேலு எதற்காக ஒவ்வொருவரையும் தேடி தேடி கொலை செய்கிறார் அவர் செய்யும் கொலைகளுக்கும், கதாநாயகன் பகத் பாசிலுக்கும் என்ன தொடர்பு ? என்பதுதான் இந்த மாரீசன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த மாரீசன் திரைப்படத்தில் கதாநாயகனாக பகத் பாசில் நடித்திருக்கிறார்.
இந்த மாரீசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் பகத் பாசில் மிகவும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
நல்லவன் போல் நடித்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடும் கதாநாயகன் பகத் பாசில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த மாரீசன் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக வடிவேலு நடித்துள்ளார்.
ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலு மிகவும் அருமையாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதையை நாயகர்களாக நடித்திருக்கும் பகத்வாஸில் வடிவேலு இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வதும், ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் திட்டம் போடுவது என்று திரைப்படம் முழுவதையும் இருவரும் போட்டி போட்டு நடித்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இருவரும் தங்களது தோளில் சுமந்திருக்கிறார்கள்.
வேலாயுதம் பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கும் வகையில் மிகப் பெரிய அளவில், செண்டிமெண்ட் காட்சிகளில் அளவாக நடித்து அற்புதமாக அசத்தியிருக்கிறார்.
அப்பாவி தனமான முகத்துடனும் கண்களில் பழி வாங்கும் வெறித்தனத்தையும் நிதானமான நடித்து என தனது ஒவ்வொரு அசைவுகளிலும் கவலைப்படாத வாழ வைத்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத் நடித்திருக்கும் கோவை சரளா, மற்றொரு கதாநாயகன் வடிவேல்வின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தாரா, கதாநாயகன் பகத் பாசில் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, கதாநாயகன் பகத் பசுவின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரேனுகா, இப்பொழுது கதாநாயகன் வடிவேல் நம்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா அனைத்து கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அளவாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, ஒளிப்பதிவு மூலம் இருவருடைய இருசக்கர வாகன பயணத்தை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, மட்டுமல்லாமல் இருவரின் இயல்பான நடிப்பை சிந்தாமல் சிதறாமல் காட்சிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் சிறப்பாக பயணித்திருக்கிறது.
இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு பயணம் மற்றும் அந்த பயணத்தின் நடுவே சில மர்மங்கள் என்ற ரீதியில் சுவாரஸ்யமாக திரைப்படத்தை அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சுதீஷ் சங்கர்.
மொத்தத்தில், – ‘மாரீசன்’ திரைப்படம் ரசிகர்களின் மனம் கவரும்.










