‘ல்தகா சைஆ’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- சதா நாடார், மோனிகா சலேனா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சதா நாடார்.
ஒளிப்பதிவாளர் :- எம்.ஏஸ். மனேகுமார்
படத்தொகுப்பாளர் :- காளிதாஸ்.
இசையமைப்பாளர் :- ஜான்சன்.
தயாரிப்பு நிறுவனம் :- கப்பிள்ஸ் கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- சதா நாடார், மோனிகா சலேனா.
ரேட்டிங்:- 1 25/5.
கதாநாயகன் சதா நாடார், கதாநாயகி மோனிகா சலேனா இருவருக்கும் திருமணம் ஆகி வசதியான வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் கதாநாயகன் சதா நாடார் கனவில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அப்படியே நிஜத்திலும் நடக்க ஆரம்பிக்கிறது.
மனரீதியாக பாதிப்படையும் கதாநாயகன் சதா நாடார் பார்த்து கதாநாயகி மோனிகா சலினா பயந்து நடுங்குகிறார்.
கதாநாயகன் சதா நாடாரின் இந்த திடீர் மாற்றத்தின் காரணம் என்ன?,
அதில் இருந்து கதாநாயகன் சதா நாடார் மீண்டாரா? மீளவில்லையா? என்பதுதான் இந்த ‘ல்தகா சைஆ’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ல்தகா சைஆ’ திரைப்படத்தில் கதாநாயகனாக சதா நாடார் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் சதா நாடாருக்கு நடிகருக்கனா முகம் இல்லை அனால் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த ‘ல்தாகா சைஆ’ திரைப்படத்தில் கதாநாயகியாக மோனிகா சலேனா நடித்திருக்கிறார்.
கதாநாயகன் சதா நாடார் மற்றும் கதாநாயகி மோனிகா சலினாவும் இருவரும் உண்மையிலேயே தம்பதிகள் என்பதால் ரியல் தம்பதி ரீல் தம்பதியாக நடித்திருப்பது மட்டும் அல்ல இந்த ‘ல்தாகா சைஆ’ திரைப்படத்தை, தயாரித்து இயக்கியும் உள்ளார்கள்.
திரைப்படத்தில் சொல்லும்படியான பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. சிறு சிறு கதாபாத்திரங்கள் புதிய முகங்கள் வந்து செல்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் எம்.எஸ். மனோகுமார் கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு மூலம் சிறப்பு செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜான்சன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் ஆரம்பக் காட்சிகளின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகள் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சோதித்து இருக்கிறார்.
மொத்தத்தில், ‘ல்தகா சைஆ’ திரைப்படம் கனவாக மட்டுமே இருக்கிறது நிறைவாகவும் நினைவாகவும் மாறவில்லை.