‘அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விபின் ராதாகிருஷ்ணன்.

ஒளிப்பதிவாளர் :- அன்ஜாய் சாமுவேல்.

படத்தொகுப்பாளர் :- பிரதீப் சங்கர்.

இசையமைப்பாளர் :- முகமது மக்பூல் மன்சூர்.

தயாரிப்பு நிறுவனங்கள் :- ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & என்ஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ.

தயாரிப்பாளர்கள் :- கார்த்திகேயன் சந்தனம்,  ஃபிரோஸ் ரஹீம் & அன்ஜாய் சாமுவேல் ஷம்சுதீன் காலிட், அனு ஆபிரகாம்.

ரேட்டிங் :- 3.5./5.

சாகித்திய அகாடமி விருது வாங்கிய எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ‘அங்கம்மாள்’

கதையின் நாயகி கீதா கைலாசத்துக்கு இரண்டு மகன்கள், இளைய மகன் சரண் சக்தி மூத்த மகன் பரணிக்கு திருமணமாகி மனைவி தென்றல் ரகுநாதன், மற்றும் மகள் வாழ்ந்து வருகிறார்.

நான் சொல்வதை தான் வீட்டில் உள்ள அனைவரும் கேட்க வேண்டும் என்ற மனநிலையில் பிடிவாத குணத்தை கொண்ட ஜாக்கெட்  அணியும் பழக்கமே இல்லாத கதையின் நாயகி கீதா கைலாசம் மூத்த மகன் பரணி, அவருடைய மனைவி, தென்றல் ரகுநாதன், இளைய மகன் சரண் சக்தி என வீட்டில் உள்ள அனைவரும் கதையின் நாயகி கீதா கைலாசத்தை எதிர்த்துப் பேசக்கூட தைரியம் இல்லாமல் இருந்து வருகிறார்கள்.

படிக்காத மூத்த மகன் பரணி விவசாயம் செய்து கொண்டு, இளைய மகன் சரண் சக்தியை மட்டும் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராகி விடுகிறார்.

மருத்துவம் படித்த இளைய மகன் சரண் சக்தி ஒரு பணக்காரப் பெண் முல்லையரசியை,
காதலிக்க, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து  பெற்றோர்களின் சம்மதத்தைக் கேட்க  முல்லையரசியின், பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.

முல்லையரசியின் பெற்றோர் மருத்துவரான சரண் சக்தி வீட்டிற்கு சந்திக்க வரும்போது தன்னை தரைகுறைவாக எடை போட்டு விடக் கூடாது என்று நினைக்கும் சரண் சக்தி, ஜாக்கெட் எனும் மேல் சட்டை அணியும் பழக்கமே இல்லாத தன் தாய் கதையின் நாயகி கீதா கைலாசத்தை ஜாக்கெட் அணியச் அதைச் சொல்லத் தயக்கப்பட அவரது பரணியில் மனைவி தென்றல் ரகுநாதன்,
மூலம் சொல்ல வேண்டும் என நினைக்கிறார்.

கதையின் நாயகி கீதா கைலாசம் ஜாக்கெட் அணிய விருப்பம் இல்லாமல் வெறுப்போடு இருக்கும் நிலையில் ஜாக்கெட்  அணியும் பழக்கமே இல்லாத கதையின் நாயகி கீதா கைலாசம் ஜாக்கெட் அணிந்தாரா? ஜாக்கெட் அணியவில்லையா? என்பதுதான் இந்த ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘அங்கம்மாள்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார்.

‘அங்கம்மாள்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம்
கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஜாக்கெட் அணியாமல் இருப்பது, கையில் பச்சைக் குத்திக் கொண்டிருப்பது, என அனைத்துக் காட்சிகளிலும் சுருட்டு பிடித்துக் கொண்டு அனைத்து பற்களைக் கறையாக வைத்திருப்பது,
கதாபாத்திரத்திற்கு ரொம்பவே புதுமையாக தெரிகிறார்.

யார் என்ன எனப் பார்க்காமல் அனைவரையும்  மயிறு என ஏக வசனத்தில் பேசுவது,  இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தில் ஊர் முழுக்க சுற்றுவது என  அங்கம்மாள் கதாப்பாத்திரமாக மாறி நிற்கிறார்.

பவள முத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரண் சக்தி  துடிப்பான நடிப்பு, படித்த இளைஞராகக் காதல் திருமணம் என்னவாகும் எனக் மனக்குழப்பத்துடன் கொஞ்சம் டென்ஷனோடு சுற்றிக் கொண்டு மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சுடலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாடோடிகள் பரணி. இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.

சரண் சக்தியின் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
முல்லையரசி நடிப்பிலும் அழகிலும் ரசிக்க வைக்கிறார்.

பரணியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தென்றல் ரகுநாதன், மிக யதார்த்தமான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

பரணி மற்றும் தென்றல் ரகுநாதன், மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதையின் நாயகி அங்கம்மாளின் தோழிகளாக நடித்திருக்கும் அந்த ஊர் பெண்கள், அங்கம்மாள் ஒரு தலையாக விரும்பும் மனிதர் என எல்லாமே அவ்வளவு தத்ரூபமான முகங்கள். தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் :- அன்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவு மூலம் மிகவும் அழகாக காட்டியிருப்பது மட்டுமல்லாமல் அந்த வறண்ட நிலப்பரப்பை மிகச் சிறப்பாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் :- முகமது மக்பூல் மன்சூர் இசையில் பாடல்கள் பின்னணி இசை கதையின் தன்மை கேட்ப திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை எடுத்து, அதை ஒரு திரைப்படமாக்க வேண்டும் என்ற உணர்வை இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் பாராட்டியாக வேண்டும்.

மொத்தத்தில், ‘அங்கம்மாள்’  திரைப்படம் அருமையாக உள்ளது.

error: Content is protected !!