’மிடில் கிளாஸ்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- முனிஷ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரைஷி, மாளவிகா அவினாஷ், கோடாங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கிஷோர் முத்துராமலிங்கம்.

ஒளிப்பதிவாளர் :- சுதர்சன் சீனிவாசன்.

படத்தொகுப்பாளர் :- சான் லோகேஷ்.

இசையமைப்பாளர் :- பிரணவ் முனிராஜ்.

தயாரிப்பு நிறுவனங்கள் :- ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ.

தயாரிப்பாளர்கள் :- தேவ், கே.வி.துரை.

ரேட்டிங் :- 3.5./5.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டு தன் மனைவி கதையின் நாயகி விஜயலெக்ஷ்மி மகள் மற்றும் மகனுடன் குடும்பத்தை நடத்தி கொண்டு கதையின் நாயகன் முனிஷ்காந்த வாழ்ந்து வரும் நிலையில் தன்னுடைய  சொந்த ஊரில் எப்படியாவது நிலம் வாங்கி செட்டிலாக வேண்டும் என பெரிய கனவுடன் வாழ்ந்து வருகிறார்.

அதே நேரத்தில் கதையின் நாயகன் முனிஷ்காந்த மனைவி கதையின் நாயகி மனைவி விஜயலட்சுமி  சென்னையில் தனக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருக்கிறார்.

இந்த இருவரில் கனவுகள் ஒரு பக்கம் இருக்க, குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் வீட்டுச் செலவுகள் என்று தினமும் திண்டாடி  கொண்டிருக்கும் நிலையில் தனது இறந்த தன் தந்தை வேலராமமூர்த்தி மூலமாக  கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலை ஒன்று கைக்கு கிடைக்கிறது.

இந்த ஒரு கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கதையின் நாயகன் முனிஷ்காந்த மனைவி கதையின் நாயகி  விஜயலட்சுமி கடன் வாங்கி பல செலவுகளை  தொடங்கி விடுகின்றனர்.

குடும்பத்தின் வாழ்க்கையில் கிடைத்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த காசோலை திடீரென தொலைந்துவிட, அவர்களின் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்கள்தான் என்ன?, தொலைந்து போன ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை கதையில் நாயகன் முனிஸ்வரன் கையில் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக முனீஸ் காந்த் நடித்திருக்கிறார்.

பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த முனீஷ்காந்த், இந்த ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எடுத்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருந்தாலும் அதற்காக எந்த விதமான புதிய முயற்சிகளில்  ஈடுபடாமல், தன்னுடைய உடல் மொழி வசன உச்சரிப்பு என  வழக்கமான நடிப்பை கொடுத்து  கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக விஜயலட்சுமி நடித்துள்ளார். 

கதையின் நாயகியாக,  நடித்திருக்கும் விஜயலட்சுமி, நடுத்தரக் குடும்பத்தில் உள்ள பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் மிகவும் சிறப்பாகவும் மிகவும் எதார்த்தமாகவும் நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

மிடில் கிளாஸ் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்கள் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி, மார்வாடி முதலாளியாக நடித்திருக்கும்  அனைத்து கதாபாத்திரங்களுக்கு  கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு மூலம் நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை மிகச் சிறப்பாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள்  கண் முன் நிறுத்தி இருக்கிறது.

இசையமைப்பாளர் பிரனவ் முனிராஜ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டும் வகையில் பயணித்திருக்கிறார்.

நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை வைத்து கொண்டு தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள், அதை பிறர்க்கு பகிர்ந்தளித்து வாழ்வதே நிறைவான வாழ்க்கை, என்ற கருத்தை வைத்து மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம்.

மொத்தத்தில், ‘மிடில் கிளாஸ்’  அனைத்து தரப்பினரும் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!