’யாரு போட்ட கோடு’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- பிரபாகரன், மேஹாலி மீனாட்சி, லெனின் வடமலை, துகின் சே குவேரா, டாக்டர்.வினிதா கோவிந்தராஜன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- லெனின் வடமலை.

ஒளிப்பதிவாளர் :- ஜான்ஸ் வி.ஜெரின்.

படத்தொகுப்பாளர் :- ஸ்ரீராம் விக்னேஷ்.எம்.

இசையமைப்பாளர் :- செளந்தர்யன், ஜெய்குமார் நடராஜன்.

தயாரிப்பு நிறுவனம் :- டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- டாக்டர். வினிதா கோவிந்தராஜன்.

ரேட்டிங் :-  2.75./5.

அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் வரும் கதாநாயகன் பிரபாகரன், அவருடைய பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகம் மற்றும் அரசியல் ஒவ்வொரு மாணவர்கள் பெயர்களுக்கு முன்னாள் மனதிலும் பதியும் அளவிற்கு முதலமைச்சர், அமைச்சர், பிரதமர், டாக்டர்,  கல்லூரியில் கூப்பிடும் ஆசிரியர் கதாநாயகன் பிரபாகரன், அது மட்டுமல்லாமல் மாணவர்கள்  வாழ்க்கையில் அனைத்தையும் கற்றுக் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் மாணவர்கள்  மனதில் ஆழமாக விதைக்கிறார்.

இந்த நிலையில், அந்த கிராமத்தில் உள்ள மதுபான கடையை அகற்ற கோரி ஆசிரியர் கதாநாயகன் பிரபாகரனிடம், படிக்கும் மாணவர்கள் போராட்டம் நடத்தி, மதுபான கடையை அந்த இடத்தில் இருந்து அகற்றி, வெற்றியும்  பெறுகிறார்கள்.

மதுபான கடையை அகற்றிய, மாணவர்கள் மீதும் ஆசிரியர் கதாநாயகன் பிரபாகரன் மீதும் இந்த மதுபான கடையில், பார் நடத்தும் அந்த கிராமத்தில் உள்ள ஊர் தலைவராக இருக்கும் வில்லன் லெனின் வடமலைக்கு பெரிய அளவில்  இழப்பு ஏற்படுவதால்,  கதாநாயகன் பிர்பாகரன் மீது கொலை வெறியில் உள்ளார்.

இதனை தொடர்ந்து கதாநாயகன் பிரபாகரனின் அந்த கிராம மக்களுக்காக அதிரடி நடவடிக்கையால், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த கிராமத்தில் உள்ள ஊர் தலைவராக இருக்கும் வில்லன் லெனின் வடமலை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்.

கதாநாயகன் பிரபாகரனால் பாதிக்கப்பட்ட அந்த கிராமத்தில் உள்ள ஊர் தலைவராக இருக்கும் வில்லன் லெனின் வடமலை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என அதற்கு சரியான நேரம் பார்த்து  கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், கதாநாயகன் ஆசிரியராக பணிபுரியும் அதே அரசுபள்ளிக்கு புதிதாக வேலைக்குச் சேரும் ஆசிரியை கதாநாயகி மேஹாலி மீனாட்சியும், ஆசிரியர் கதாநாயகன் பிரபாகரனும் இருவரும் காதலிக்கிறார்கள்.

அதே சமயம்,கதாநாயகன் பிரபாகரன் கதாநாயகி மேஹாலி மீனாட்சி காதலித்துக் கொண்டிருக்கும் விஷயம் ஊர் தலைவராக இருக்கும் வில்லன் லெனின் வடமலை தெரியவரும் நிலையில் பள்ளியில் சென்று இருவரையும் அசிங்கப்படுத்தும் நிலையில் கதாநாயகன் பிரபாகரன் மற்றும் கதாநாயகி மேஹாலி மீனாட்சி இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என வில்லன் லெனின் வடமலைக்கு தெரிய வருகிறது.

இருவரும் காதலிக்கும் விஷயத்தை அறிந்த, ஊர் தலைவர் வில்லன் லெனின் வடமலை ஒருவேளை இது கள்ளக்காதலாக இருக்கும் என நினைத்து இதை வைத்தே ஆசிரியர் கதாநாயகன் பிரபாகரனை பள்ளியில் இருந்து விரட்டியடிக்க திட்டம் போடுகிறார்.

ஏற்கனவே திருமணமான கதாநாயகி மேஹாலி மீனாட்சி கதாநாயகன் பிரபாகரனை காதலிப்பது ஏன் ?,

ஊர் தலைவர் வில்லன் லெனின் வடமலை திட்டம் தீட்டியப்படி கதாநாயகன் பிரபாகரனை அந்த அரசு பள்ளியில் இருந்து அசிங்கப்படுத்தி  விரட்டியடிக்கப்பட்டாரா?

பிரிந்திருந்த கதாநாயகி மேஹாலி மீனாட்சி கதாநாயகன் பிரபாகரன் இருவரும் ஒன்று  சேர்ந்தார்களா?, சேரவில்லையா?, என்பதுதான் இந்த‘யாரு போட்ட கோடு’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘யாரு போட்ட கோடு’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக பிரபாகரன் நடித்திருக்கிறார்

அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் பிரபாகரன், கிராமத்தில் உள்ள அரசு பள்ளி  ஆசிரியர் கதாபாத்திரத்திற்கு  கனக்கச்சிதமாக பொருந்தி  இருக்கிறார்

தனது இயல்பான நடிப்பு மூலம் அரசு பள்ளி ஆசிரியராக வாழ்ந்திருக்கும் பிரபாகரன், முதல் திரைப்படம் போன்று தெரியாத அளவிற்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த ‘யாரு போட்ட கோடு’ திரைப்படத்தில் கதாநாயகியாக மேஹாலி மீனாட்சி, நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மேஹாலி மீனாட்சி, ஆசிரியை கதாபாத்திரத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் எவ்வித குறையும் இல்லாமல் நடித்திருப்பதோடு, நடனக் காட்சிகளில் கவர்ச்சிகளை காண்பித்து ரசிகர்கள் மனதுக்கும், கண்களுக்கும் கவர்ச்சி விருந்தும் படைத்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மறைந்த டேனியல் பாலாஜி இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தால் எப்படி இருக்குமோ அதே போல் நடித்திருக்கிறார்.

வில்லன் லெனின் வடமலையின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் துகின் சே குவேரா, வியக்கும் வைக்கும் விதத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று நடிப்பில் அசத்தியிருக்கிறார். 

நீளமான வசனங்களை, உணர்ச்சி பொங்க பேசியிருக்கும் துகின் சே குவேராவுக்கு திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கைதட்டல் பெறுகிறார்.

 வில்லன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டாக்டர். வினிதா கோவிந்தராஜன் உள்ளிட்ட மற்றும் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், தங்களது இயல்பான நடிப்பு மூலம்  கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜான்ஸ் வி.ஜெரின், ஒளிப்பதிவு மூலம்  பிரமாண்டமாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் செளந்தர்யன் இசையில், பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.

இசையமைப்பாளர் ஜெய்குமார் நடராஜன்னின் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு மிக சிறப்பாக பயணித்திருக்கிறார்.

தான் இயக்கம் முதல் நிரைப்படத்தை வெறும் கமர்ஷியல் திரைப்படமாக இயக்காமல், மக்களை சிந்திக்க வைக்கும் சிறந்த படைப்பாகவும் குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால் பள்ளி படிக்கும் மாணவர்கள் மூலமாக சமூகத்திற்கு அவர் சொல்லும் கருத்துகள் அனைத்தும் வலிமை மிக்கதாகவும், மிகச் சிறப்பாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் லெனின் வடமலை.

மொத்தத்தில், ‘யாரு போட்ட கோடு’ திரைப்படம் சிறப்பு.

error: Content is protected !!