“பைசன்” திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், அருவி மதன், அனுராக் அரோரா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  மாரி செல்வராஜ்.

ஒளிப்பதிவாளர் :- எழில் அரசு கே.

படத்தொகுப்பாளர் :- சக்தி திரு.

இசையமைப்பாளர் :- நிவாஸ் கே பிரசன்னா.

தயாரிப்பு நிறுவனம் :- நீலம் ஸ்டுடியோஸ். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் 

தயாரிப்பாளர்கள் :- சமீர் நாயர், தீபக் சேகல், பிஏ.  இயக்குனர் ரஞ்சித், அதிதி ஆனந்த்.

ரேட்டிங் :- 4.25./5.

அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘பைசன்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

தென் மாவட்டங்களில் 1990 காலகட்டங்களில் நடந்த இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களின்  மோதல்கள்தான் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களை பாதித்த  வாழ்க்கை திசைமாறிய இளைஞர்களின் வாழ்க்கை மற்றும் ஒரு கபடி வீரரின் வலி மிகுந்த வாழ்க்கையை பற்றிய கதைதான் இந்த ‘பைசன்’ திரைப்படம்.

கிராமத்தில் தந்தை பசுபதி மற்றும் அக்கா ரஜிஷா விஜயன், பள்ளியில் படித்து வரும் நிலையில் கபடி விளையாட்டு என்றால்  கதாநாயகன் துருவ் விக்ரம் மிகவும் பிடித்தமான விளையாட்டைப் பற்றி தனது பள்ளி ஆசிரியர் அருவி மதனிடம் ஆசையை தெரிவிக்க தந்தை பசுபதி
கபடி வீரனாக இருந்தால் பிரச்சனைகள் வரும், விரோதம் வரும் என மறுப்பு தெரிவிக்கிறார்.

ஆனால் கதாநாயகன் துருவ் விக்ரமு கபடி விளையாட்டில் பெரிய வீரராக வரவேண்டும் என அக்கா ரஜிஷா விஜயன், ஆதரவாக இருந்து வருகிறார்.

இதனால் பெரிய கபடி வீரனாக ஆக வேண்டும் என  கதாநாயகன் துருவ் விக்ரம் ஆசைப்பட்டு வருகிறார்.

அதே கிராமத்தில் வசிக்கும் அமீர், மற்றும் லால் இருவரும் இரண்டு ஜாதி தலைவர்களாக இருந்து கொண்டு அடிக்கடி அந்த கிராமத்துக்குள் சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள்.

அமீர், மற்றும் லால் இந்த இருவரின் சண்டை கதாநாயகன் துருவ் விக்ரம் கபடி வீரராக ஆவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது.

இந்த நிலையில் இறுதியாக பலவிதமான தடைகளை கடந்து கதாநாயகன் துருவ் விக்ரம் ஆசைப்பட்ட கபடி விளையாட்டில் சாதித்தாரா? சாதிக்கவில்லையா? என்பதுதான் இந்த “பைசன்” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் “பைசன்” திரைப்படத்தில் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடித்திருக்கிறார்.

பள்ளிப் பருவத்திலும், சரி  கபடி வீரராக களத்தில் விளையாடும் போதும் சரி  கதாபாத்திரத்திற்கான தோற்றத்தின் வேறுபாட்டை வெளிப்படுத்த கதாநாயகன் துருவ் விக்ரம், இந்த பைசன் திரைப்படத்திற்காக மிகப் பெரிய அளவில் கடுமையாக உழைத்திருக்கிறார்.

பைசன் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கதாபாத்திரமாகவும் கதாநாயகன் துருவ் விக்ரம்,  தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த பைசன் திரைப்படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன், நடித்துள்ளார்.

கதாநாயகியாக  நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் துருவ்  விக்ரம் மற்றும் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் இவர்களுடைய கெமிஸ்ட்ரி திரைப்படத்தில் மட்டுமல்லாமல் இவர்கள் இருவரின் வாழ்க்கையில் கூட இணைவார்கள் என  தோன்றுகிறது.

கதாநாயகன் துருவ் விக்ரமின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பசுபதி, கண்களின் மூலமாகவே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி, தந்தையின் பாசத்தையும் பதட்டத்தையும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறார்.

கதாநாயகனின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜிஷா விஜயன், ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருவி மதன், இயக்குநர் அமீர், லால் என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து  திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே, ஒளிப்பதிவு மூலம்  தென் மாவட்டங்களில் 1990 காலகட்டங்களில் பயணித்த சிறப்பான அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் பின்னணி இசை என அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க, வைக்கும் அளவிற்கு இருக்கிறது.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நிலப்பரப்பின் சமூக மோதல்கள் மற்றும் அந்த மண்ணின் கோபத்தையும், வலியையும் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

மொத்தத்தில், ‘பைசன்’  அனைத்து சமூகத்தினரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!