‘மை லார்ட்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா, அருள் எழிலன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராஜுமுருகன்.
ஒளிப்பதிவாளர் :- நீரவ் ஷா.
படத்தொகுப்பாளர் :- சத்யராஜ் நடராஜன்.
இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஒலிம்பியா மூவிஸ்
தயாரிப்பாளர் :- ஜெயந்தி அம்பேத்குமார்.
மக்கள் தொடர்பு :- யுவராஜ்.
ரேட்டிங் :- 3.5./5.
கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் கதாநாயகி சைத்ரா ஜே. ஆச்சார், அவருடைய தந்தை மறைவுக்குப் பிறகு தன்னை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை கதாநாயகன் சசிகுமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்நிலையில் கதாநாயகி சைத்ரா ஜே. ஆச்சார், நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என கதாநாயகன் சசிகுமார் போராடுகிறார்.
ஒரு கட்டத்தில் கதாநாயகன் சசிகுமாரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கதாநாயகி சைத்ரா ஜே. ஆச்சார், கூற இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்கள்.
அதே சமயம் சென்னையில் வசித்து வரும் மத்திய அமைச்சர் ஆஷா சரத்துக்கு காசு இருந்தும் கடவுளின் தீர்த்த தண்ணீரை கூட குடிக்கக் கூடாத அளவுக்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் கிட்னி பிரச்சனை இருப்பதால் மத்திய அமைச்சர் ஆஷா சரத்துக்கு காப்பாற்ற முயற்சிக்கும் அவருடைய மகன் கிட்னி கொடுக்கும் நபர்களை தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் கதாநாயகன் சசிகுமாரை பற்றி அறிய வர அவரைத் தேடி கோவில்பட்டிக்கு வருகிறார்கள்.
மத்திய அமைச்சர் ஆஷா சரத்துக்கு கதாநாயகன் சசிகுமார் கிட்னி தானம் செய்தாரா?, கிட்னி தானம் செய்யவில்லையா?, என்பதுதான் இந்த ‘மை லார்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘மை லார்ட்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக சசிகுமார் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் திரைப்படத்தின் அறிமுகக் காட்சியே அவருடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருக்க, பிணவறையில் பிரேதமாக இருக்கும் கதாநாயகன் சசிகுமார் உயிரோடு வெளியே வந்து போடும் ஒற்றை ஷாட் பாடல் காட்சியில் சிறப்பான ஆட்டத்தை போட்டு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
கொஞ்சம் வெகுளித்தனமாகவும் போதிய கல்வியறிவு இல்லாமலும் கதாநாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் மிகவும் நல்லவராக நடிப்பது என்பது சசிகுமாருக்குப் புதிய விஷயம் இல்லை என்றாலும் கதையும் கதாபாத்திரத்தையும் உணர்ந்து கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
இந்த ‘மை லார்ட்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக சைத்ரா ஜே. ஆச்சார், நடித்துள்ளார்.
இறந்து போன தந்தையின் ஆவி தனது உடலில் வந்ததாக நாடகமாடி கதாநாயகன் சசிகுமாரையே மணக்கும் கதையின் நாயகி சைத்ரா ஜே. ஆச்சார், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்பட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத். கதாபாத்திரத்தை உள்வாங்கி படுத்த படுக்கையில் இருந்து எழாமல் படுத்துக் கொண்டே அற்புதமாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.
பத்திரிக்கை ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் அடி உதை மிதி வாங்கிய பிறகும் நியாயத்தின் பக்கம் நிற்கும் பத்திரிகை ஆசிரியரான கதாபாத்திரத்தில் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
திரைப்படம் தொடங்கியதில் இருந்து புரோக்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள் ஏழிலனின் நடிப்பு சிறப்பு.
நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயபிரகாஷ், முற்போக்கு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் கோபி நயினார் போன்ற முகம் தெரிந்தவர்கள் மட்டுமல்லாமல் முகம் தெரியாத ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மூலம் இயக்குனரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தனிக் கவனம் செலுத்தி மிகவும் சிறப்பான இசையைக் கொடுத்து இருக்கிறார்.
இந்த திரைப்படம் முழுவதும் அரசாங்கத்தில் நடக்கும் அவலங்களையும் நிலைப்பாடுகளின் நடைமுறை முரண்பாடுகளை மிகவும் நக்கலுமாக திரைப்படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜுமுருகன்.
மொத்தத்தில், ‘மை லார்ட்’ அனைவரும் பார்க்க வேண்டிய சிறப்பான திரைப்படம்.











