’மைலாஞ்சி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ஸ்ரீராம் கார்த்திக், கிருஷா குருப், முனிஷ்காந்த், சிங்கம்புலி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அஜயன் பாலா.

ஒளிப்பதிவாளர் :- செழியன்.

படத்தொகுப்பாளர் :- ஸ்ரீகர் பிரசாத்.

இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :-  டாக்டர் அர்ஜுன்.

மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.

ரேட்டிங் :-  2./5.

ஊட்டியில் ’மைலாஞ்சி’ என்ற பெயரில் பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் கதாநாயகி கதாநாயகி கிருஷா குருப், தன்னுடைய தாய் மாமன் உடனான திருமணத்தில் இருந்து தப்பிப்பதற்காக தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவரை காதலிக்கிறார்.

தான் காதலிக்கும் காதலனிடம் தன்னுடைய காதலை சொல்ல நினைக்கும் போது, அவர் ஊட்டியை விட்டு சென்னைக்கு சென்று விடுகிறார். 

புகைப்படக் கலைஞரான கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்தி, அபூர்வமான பறவை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார்.

அந்த அபூர்வமான பறவையின் புகைப்படம் எடுக்கச் வரும் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக்கை  அதே ஊரில் கதாநாயகி கிருஷா குருப், எதிர்பாராத விதமாக சந்திக்கிறார்கள்  இந்த சந்திப்பு  கதாநாயகி கிரிஷா குரூப்  நட்பு தொடரும் நிலையில் அந்த நட்பு காதலாக மாறுகிறது.

தன் காதலை கதாநாயகி கிரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும் போது, கதாநாயகி கிரிஷா குரூப் தன் மனதில் உள்ள தனது காதலை சொல்லி, தன்னை சென்னையில் இருக்கும் எனது காதலனுடன் சேர்த்து வைக்குமாறு கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக்கிடம் உதவி கேட்கிறார்.

எதுவும் தெரியாத ஒருவரை தேடிப் பிடித்து சேர்த்து வைப்பதாக சொன்னாலும், அவர் மனதில் உள்ள தனது காதலை வளர்க்கும் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக், மறுபக்கம் கதாநாயகி கிரிஷா குரூப்பின் காதலை சேர்த்து வைக்கும் முயற்சியில் போலியாக ஈடுபடுகிறார்.

கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக்  மற்றும் கதாநாயகி கிருஷா குருப், இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் காதலும், அந்த காதலில் உருவாகும் சிக்கல்களையும் தாண்டி இவர்கள் இருவரும் காதலில் இணைந்தார்களா?, காதலில் இணையவில்லையா?, என்பதுதான் இந்த ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘மைலாஞ்சி’  திரைப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், தனது  இயல்பான  நடிப்பை வழங்கியுள்ளார்.

இந்த ‘மைலாஞ்சி’  திரைப்படத்தில் கதாநாயகியாக கிரிஷா கருப், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கிரிஷா கருப், வெகுளி தன்மை கொண்ட பெண் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

முனிஷ்காந்த், சிங்கம்புலி இருவரின் நகைச்சுவை காட்சிகள் திரைப்படத்திற்கு ஓரளவு சிறப்பு சேர்த்திருக்கிறது.

இந்த ‘மைலாஞ்சி’  திரைப்படத்தில்  நடித்திருக்கும் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் செழியனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது  ஒளிப்பதிவாளர் செழியனின் ஒளிப்பதிவு பணிகளை மட்டுமே குறிப்பிடலாம்.

ஊட்டியின் இயற்கை அழகை ஒவ்வொரு காட்சியிலும் ஓவியமாக பதிவு செய்து, திரைப்படம் பார்க்கும்  ரசிகர்களுக்கு கண்கொள்ளாக் காட்சிகளை வழங்கியுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பின்னணி இசையிலும் அவருடைய வழக்கமான மெருகூட்டல் குறைவாக இருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் குறையாக உள்ளது.

இயக்குநர் அஜயன் பாலா  எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் பத்திரிக்கையாளர் , இயக்குனர் அவருடைய முதல் திரைப்படத்தை  முதல் முயற்சியான இந்த திரைப்படத்தில் எந்த ஒரு அனுபவத்தின்  முழுமையாக வெளிப்படவில்லை.

பழங்காலத்தில் உள்ள  கதைக்களம் மற்றும் வழக்கமான திரைக்கதை  திரைப்படத்தின் மிகப்பெரிய அளவில் பலவீனமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், இந்த  “மைலாஞ்சி” திரைப்படம்  ரசிகர்களின் மனதை தொடவில்லை.

error: Content is protected !!