ஃப்ரீடம் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சசிக்குமார், லிஜோமோல் ஜோஸ், கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா, சுதேவ் நாயர், மாளவிகா, விஜய் சத்யா, கம்பட்டி மணிகண்டன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சத்யசிவா.
ஒளிப்பதிவாளர் :- NS உதயகுமார்.
படத்தொகுப்பாளர் :- ஶ்ரீகாந்த் NB.
இசையமைப்பாளர் :- ஜிப்ரான்.
தயாரிப்பு நிறுவனம் :- விஜய கணபதி பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- பாண்டியன் பரசுராமன், சுஜாதா பாண்டியன்.
ரேட்டிங் :- 3.5/5.
இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்களை ஒரு சிலரை ஆங்காங்கே கேம்ப் அமைத்து தங்க வைக்கப்பட்டனர்.
1990 1991 காலகட்டங்களில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கள்ளத்தோணி மூலம் வந்து இறங்கும் கதாநாயகன் சசிகுமார் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படும் நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள அதே முகாமில் ஏற்கனவே கதாநாயகன் சசிகுமார் கர்ப்பிணி மனைவி கதாநாயகி லிஜோ மோல் ஜோஸ் அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்க, கதாநாயகன் சசிகுமார் கதாநாயகி லிஜோ மோல் ஜோஸ் மற்றும் மனைவியும் இனைந்த அந்த சந்தோஷம் இரண்டு நாட்கள் கூட நிலைக்கவில்லை.
இந்த நேரத்தில் சென்னைக்கு வரும் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் தற்கொலைப்படைத் தாக்குதலில் கொல்லப்படுகிறார்.
அந்த சம்பவத்தின் தமிழகத்திற்கு வந்த இலங்கை அகதிகளாக வந்த தமிழர்களை சந்தேகிக்கப்பட்ட சிலரை விசாரிப்பதற்காக அழைத்து கொண்டு விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் வேலூர் கோட்டையில் அடைகிறார்கள்.
இரண்டு மூன்று நாட்களில் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் அழைத்துக் கொண்டு போன அத்தனை இலங்கைத் தமிழர்களையும் அங்கே பல விதமான சித்திரவதை செய்து பலவிதமான இன்னல்களை உள்ளாக்கி வருடக் கணக்கில் தங்க வைத்து நாளுக்கு நாள் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் கதாநாயகி லிஜோ மோல் ஜோஸ் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்து அந்தப் பெண் குழந்தைக்கு நான்கு வயதாகி விடுகிறது.
இந்த சூழலில் உனது குழந்தையுடன் ஒரு முறை கூட கணவன் கதாநாயகன் சசிகுமாரை முகத்தை காண முடியாமல் கதாநாயகி லிஜோ மோல் ஜோஸ் ஏங்கித் தவிக்கிறார்.
இந்த நிலையில் நான்கு வருடங்களாக மனைவி குழந்தைகளை காணாமல் அடைபட்டு கிடந்த இலங்கை தமிழர்களுக்கு காவல்துறையினிடமிருந்து நீதி கிடைத்ததா?, நீதி கிடைக்கவில்லையா ?, என்பதுதான் இந்த ஃப்ரீடம் படத்தின் மீதிக் கதை.
இந்த ஃப்ரீடம் திரைப்படத்தில் கதையின் நாயகனாக சசிகுமார் நடித்திருக்கிறார்.
மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் சசிகுமார் நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.
கதாநாயகன் சசிகுமார் தனக்கான பணியை மிகவும் தெள்ளத் தெளிவாக மிகவும் சரியாக தனக்கே உரித்தான உடல் மொழியில் கதாபாத்திரத்தை மெருகேற்றி நடித்திருக்கிறார்.
காவல்துறையினரிடம் அடி வாங்கும் காட்சியில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களில் இருந்து ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார்.
திரைப்படத்துக்குத் திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் சசிகுமார், இந்த திரைப்படத்தில் நமது தமிழ் தொப்புள்கொடி உறவுடன் ரத்தமும் சதையுமான ஒரு உண்மைக் கதையை ஒருவராக தாங்கி பிடித்து மிகவும் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்
இந்த ஃப்ரீடம் திரைப்படத்தில் கதையின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ், நடித்திருக்கிறார்.
கதாநாயகன் சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், ஆங்காங்கே பேசும் சாட்டையடி வசனங்களை பேசி மிகவும் சிறப்பாக நடிப்பை கொடுத்திருக்கிறார்
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் போஸ் வெங்கட், மற்றும் சத்யா உள்ளிட்ட நடிகர்களும் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்தில் மிகவும் விறைப்பாக நின்றனர்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுதேவ்நாயர், அவரைக் கண்டாலே இவர் மீது அனைவருக்கும் கோபம் வரும்படியான ஒரு கதாபாத்திரமாகவே நடிப்பின் மூலம் வாழ்ந்திருக்கிறார்.
ஊமை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாய்ஸ் மணிகண்டன் தனது நடிப்பின் மூலம் தனது திறனை நன்றாகவே வெளிப்படுத்திவிட்டார்
வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா அவிநாஷ், காவலராக நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா, மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மு ராமசாமி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமாக நடிப்பை கொடுத்து கதாபாத்திரமாகவே பொருந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் மிகக்கச்சிதமாக திரைப்படமாகி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்தோடு சேர்ந்து ரசிகர்களை பயணம் செய்ய வைத்து மிகப்பெரிய அளவில் திரைப்படத்திற்கு கை கொடுத்திருக்கிறார்.
உண்மை சம்பவத்தின் கதையை கையில் எடுத்த இயக்குனர் திரைக்கதையிலும் மற்றும் 45 கதாபாத்திரங்களும் எப்படியாவது இந்த துயரத்தில் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்று நமக்குள் தோன்றும் அளவிற்கான எண்ணத்தை கொடுத்தாலும், ஒரு புல்லரிக்க வைத்து மிகவும் சிறப்பான உணர்வோடு இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சத்யசிவா.
மொத்தத்தில் இந்த ஃப்ரீடம் உண்மை தமிழர்களின் வலியை சொல்லும் மிக அருமையான திரைப்படமாக அமைந்திருக்கிறது.











