‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-  சரவணன், ராஜா மலைசாமி, நிஷா துபே, காதல் சுகுமார், சுரேகா ஆர், ரோஜன் லியோன்,  மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாலு எம்.

ஒளிப்பதிவாளர் :- ஜெயக்குமார் தங்கவேல்.

படத்தொகுப்பாளர் :- எம்.எஸ் செல்வா.

இசையமைப்பாளர் :- ஜெய கே தாஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- ஆன் தி டேபிள் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- மலைசாமி ஏ எம் ராசா.

மக்கள் தொடர்பு :- ஏ ஜான்.

ரேட்டிங் :- 2.75./5.

பல வருடங்களாக நடைபெற்று வரும் சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துள்ளது.

இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள திரைப்படம் ‘போலீஸ் ஃபேமிலி’.

மதுரை காவல் நிலையத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் இருக்கும் போது காவலராக இருக்கும் காதல் சுகுமார் மற்றும் மலைசாமி ஏ எம் ராசா சந்தேகத்தின் பெயரில் ஒரு இளைஞனை கஞ்சா வைத்திருந்ததால் கைது செய்து லாக்கப்பில் வைத்து காவலர்கள் அனைவரும் இணைந்து அடித்து அந்த இளைஞன் மயக்க நிலையில் இருக்கிறாரா இல்ல இறந்துவிட்டாரா? என  தெரியாமல் குழம்பி போய்  அந்தக் இளைஞனின் உடலை மறப்பதற்காக காவலர்கள் அனைவரும் இணைந்து காவல்துறையை சேர்ந்த  வாகனத்தில் வைத்து அவள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொண்டு சென்று மயக்க நிலையில் இருக்கும் அந்தப் இளைஞனை போட்டு விட்டு வந்து விடுகிறார்கள்.

அதற்குப் பின்தான் மறுநாள் அந்த இளைஞனின் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாகத் தெரிகிறது.

அதற்குப் பின்தான் அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல மதுரையில் தலைமறைவாக இருக்கும் அரசியல் பின்புலமுள்ள மிகப்பெரிய தாதா பருத்திவீரன் சரவணனின் மகன் இறந்து விட்டான் எனத் காவல்துறையை சேர்ந்த காவலர்களுக்கு தெரிய வருகிறது.

தனது மகன் இறந்ததால் வெறி கொண்ட தாதா  பருத்திவீரன் சரவணன் தனது மகன் அதற்குக் காரணமான நான்கு காவல்துறையை சேர்ந்த காவலர்களின குடும்பங்களை பழிவாங்கும் முடிவெடுக்கிறார்.

தனது மகன் இறந்த கோபத்தில் இருக்கும் தாதா  பருத்திவீரன் சரவணன் தனது மகனின் இறப்புககு காரணமாக இருந்த காவல்துறையை சேர்ந்த காவலர்களின குடும்பங்களை   பழி வாங்கினாரா ?, இல்லை  பழிவாங்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடித்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பருத்திவீரன் சரவணன் இதில் கொடூரமான தாதா கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த காதல் சுகுமாருக்கு இந்தத் திரைப்படத்தில்  முக்கியமான கதாபாத்திரம்  நகைச்சுவைக்கு துளியும் இடம் கொடுக்காமல் முழுதும் சீரியசான கதாபாத்திரத்தை விரும்பி ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார்.

இவர்களைத்தாண்டி ராஜா  மலைச்சாமி, நிஷா துபே, சுரேகா ஆர், ரோஜன் லியோன், ரத்னம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா என அனைத்து கதாபாத்திரங்களும் நடித்திருக்கும் அனைவரும் புதிய முகம் என்று தெரியாமல்  அத்தனை  கதாபாத்திரங்களும் பொருந்தி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜெயா கே. தாஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் துணை புரிந்திருக்கின்றார்.

சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கதை என்பதால் சீரியசான முயற்சியை மேற்கொண்டு மிகச்சிறப்பாக திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் பாலு எம்.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் பாலு எம் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நல்ல பட்ஜெட் மட்டும் கிடைத்தால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விடுவார்.

மொத்தத்தில் இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம் சிறப்பு.

error: Content is protected !!